அனுராதபுரம் சாலியபுர மற்றும் ஆறாவது மைல்கல் பகுதிகளில் யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை சாலியபுர தெப்பமகுலம் வீதியில் பயணித்துக் கொணடிருந்த ஒருவரை காட்டுயானை தாக்கியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இன்று காலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுள்ளார். சாலியபுர பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து யானை ஆறாவது மைல்கல்லை நோக்கி நகர்ந்துள்ளது. தனது இல்லத்தை நோக்கி யானை வருவதை அவதானித்த நிலையில் தோட்டத்தில் தனது இரு பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த தந்தை ஒருவர் பிள்ளைகளைக் காப்பாற்ற முனைந்துள்ளார்.
பிள்ளைகளை வீட்டினுள் வைத்து பூட்டிய நிலையில் யானையால் தந்தை தாக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் 55 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தவர் 6 ஆவது மைல்கல் பகுதியில் வாயில் காவலாளியாக கடமையாற்றுபவராவார். இதேவேளை குறித்த யானையை வில்பத்து வனப்பகுதிக்குள் துரத்தியதாக அனுராதபுர வனவிலங்கு வலயத்தின் மிருக வைத்தியர் சந்தன ஜயசிங்க தெரிவித்தார்.