புதுவருட தினத்தில் நீராடச் சென்ற வேளை வவுனியா, கனகராயன் குளத்தில் மூழ்கி ஏழு வயதுச் சிறுவன் ஒருவன் நேற்று மரணமடைந்துள்ளான்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புதுவருட தினமான நேற்றைய தினம் வவுனியா, கனகராயன் குளம் பகுதியில் உள்ள ஐயனார் ஆலயத்திற்கு பின்புறமாக அமைந் துள்ள கனகராயன் குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவர்களில் ஏழு வயது நிரம்பிய நிதுசன் என்ற சிறுவன் குளத்து நீரில் மூழ்கியுள்ளான்.
இதனைக் கண்ட ஏனைய சிறுவர்கள் அச் சிறுவனை தம்மால் மீட்க முடியாத நிலையில் இத்தகவலைச் சொல்வதற்காக கனகரா யன்குளம் நகரிற்கு சென்று பொதுமக்களை அழைத்து வந்த போதிலும் குறித்த சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டு ள்ளான்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் மரண விசாரணைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு ள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.