
இதற்கமைய எதிர்வரும் பதினெட்டாம் திகதி திங்கட்கிழமை இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. வடமாகாண சபையின் 49ஆவது அம ர்வு நேற்று செவ்வாய்க்கிழமை கைதடியில் அமைந்துள்ள வட மாகாண சபையில் நடைபெற்றது.
இதில் பிரேரணைகள் குறித்த விவாதம் இடம்பெற்றபோது, வட மாகாணத்தில் சட்ட விரோதமான காணி சுவீகரிப்புக்கள் நல்லாட்சி அரசாங்கத்திலும் நடைபெற்று வருகின்றது. ஆனைக்கோட்டை கூழாவடி பகுதி யில் காணிகள் அளப்பதற்கு நில அளவையாளர்கள் முற்பட்டபோது, அங்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபரின் அலுவலகமும் முற்றுகையிடப்பட்டது.
வடக்கில் காணி சுவீகரிப்பதற்காக 168 திட்டங்கள் இருக்கின்றது. கிளித்தட்டு மறிப்பது போன்று மக்களின் காணிகளை பாதுகாப்பதற்காக நாங்களும் ஓடுகின்றோம். அரசாங்கத்தின் கொடிய முகம் எம்மைத் தீண்டு கின்ற போது, அரச நிர்வாகத்தினை முடக்க வேண்டிய நிலை ஏற்படும். எமது மக்களுக்கு நடக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு தர வேண்டும். அந்த தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கு நாமும் போராடுகின்றோம். மக்களும் போராடிக்கொண்டு இருக்கின்றார்கள்.
எனவே, வடமாகாணத்தின் காணி மற்றும் சட்டத்தினை கையாள்வதற்கு வட மாகாண முதலமைச்சர் இருக்கின்றார் எனவே, காணி சுவீகரிப்பினை நிறுத்துவதற்கு உடனடியாக ஜனாதிபதிக்கு தெரிவிக்குமாறு வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அதன்பின்னர், வடமாகாண முதலமைச்சர் கருத்து தெரிவிக்கும் போது, வடமாகாண காணி பிரச்சினைகள் குறித்து கலந்துரையா டுவதற்கு எதிர்வரும் 18 ஆம் திகதி ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக் கிரமசிங்க ஆகியோர் இணைந்து அழைப்பு விடுத்துள்ளனர்.
அந்த கலந்துரையாடலின் போது, காணி சுவீகரிப்பு மற்றும் காணிப் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு எடுத்துக் கூறுவதற்கு, உறுப்பினர்களிடம் இருக்கும் தரவுகளை கையளிக்குமாறும் சட்டத்திற்கு புறம்பாக காணிகள் சுவீ கரிக்கப்படுகின்ற விடயம் பற்றியும், அதன் பாரதூரங்கள் பற்றியும் எடுத்துக் கூறுகிறேன் என தெரிவித்த முதலமைச்சர் அதற்காக தரவுகளை தந்துதவுமாறு உறுப்பி னர்களிடம் கோரியுள்ளார்