நாளைய ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனாநாயகப் பிரிவு என்போரின் பெயரில் வடமாகாணம் முழுவதும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களாகிய நாங்கள் மகிந்தவையும், மைத்திரியையும் நிராகரிப்போம்.
தேர்தலைப் பகிஸ்கரிப்போம்.
வாக்களிப்பை தவிர்ப்போம். அல்லது எமது வாக்குகளைச் செல்லுபடியற்றதாக ஆக்கிவிடுவோம்.
என அத்துண்டுப் பிரசுரங்களில் எழுதப்பட்டுள்ளது. குறித்து துண்டுப்பிரசுரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயகப் பிரிவு என அதில் உரிமையும் கோரப்பட்டுள்ளது.
இத்துண்டுப்பிரசும் குறித்து கருத்துரைத்துள்ள மாவை சேனாதிராஜா இத்துண்டுப் பிரசுரத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் எதுவித தொடர்பும் இல்லை எனக் கூறியுள்ளார்.