சட்ட விரோத மீன்பிடியில் ஈடு பட்டுக்கொண்டிருந்த மீனவர்களின் விபரங்களை சேகரிக்கச் சென்ற கிராம சேவையாளர் மீது தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் நேற்று மாலை 4.00 மணியளவில் கொக்குத்தொடுவாய் வடக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் 25 படகுகளில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர்களின் விபரங்களை சேகரிப்பதற்கு பிரதேசத்துக்கு பொறுப்பான கிராம சேவையாளர் அப்பகுதிக்குச் சென்றுள்ளார்.
அங்கிருந்த மீனவர் ஒருவரிடம் விபரங்களைக் கேட்க முற்பட்டவேளை ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியநிலையில் கிராம சேவையாளர் மீது மீனவர் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான கிராம சேவையாளர் காயமடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.