பிரான்சு பாரிஸ் புறநகர்ப் பகுதியான நொயன் லு பிறோ (Nogent Le Perreux) பகுதியில் சற்று முன்னர் (11.04.2016) கட்டடத் தொகுதி ஒன்றில் பாரிய தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
கடைத்தொகுதிகளை உள்ளடக்கியதான இப்பகுதியின் மேற்புறத்திலேயே தீ பரவியுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்துவதிலும் பாதிக்கப்பட்டோரை வெளியேற்றும் நடவடிக்கையிலும் தீவிரமாக இறங்கியிருப்பதைக் காணமுடிந்தது.
காயமடைந்தவர்கள் விரைவாக முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
குறித்த கட்டடத் தொகுதியில் தமிழ் குடும்பங்களும் வசித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தீ பரவியமைக்கு மின்னொழுக்கு அல்லது எரிவாயுக் கசிவு காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப் படுகின்றது.