
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பு அகற்றப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை நாட்டில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் பாதுகாப்பு அமைச்சரின் இந்த கருத்து வெளிவந்துள்ளது. மகிந்த ராஜபக்சவை பழிங்வாங்குவதற்கோ அல்லது அவரை அவமானப்படுத்தும் நோக்குடனோ அவருக்கான இராணுவ பாதுகாப்பு அகற்றப்படவில்லை எனவும் அமைச்சர் ருவன் விஜேவர்த்தன விளக்கமளித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பாதுகாப்பு அமைச்சர் உட்பட முக்கியஸ்தர்களும் சாதாரண பொலிஸ் பாதுகாப்புத்தான் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.