ஐ.எஸ். தீவிரவாதிகளால் மனித கேடயமாக பயன்படுத்தப்பட்ட குடும்பம் ஒன்று தாங்கள் அனுபவித்த துன்பங்கள் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளனர்.
ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகெங்கும் உள்ள மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர்.
தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக அப்பாவி பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் மனித கேடயமாக உள்ளவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஈராக்கின் மக்மோரில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வரும் அபு இஸ்ரா என்பவர் இது தொடர்பாக கூறியதாவது, எங்கள் கிராமத்தை கைப்பற்றிய தீவிரவாதிகள் அங்குள்ள மக்களை கேடயமாக பயன்படுத்து தங்களை தற்காத்துக்கொண்டனர்.
மேலும் ஏராளமான கட்டளைகள் போட்டனர். ஆண்கள் கட்டாயம் நீளமாக தாடி வளர்க்க வேண்டும்.
தாடி சிறிதாக இருக்கிறது என்று என்னிடமே இருமுறை அபராதம் பெற்றுள்ளனர். அதேபோல் பெண்களுக்கு பர்தா கட்டாயம்
எங்கள் வீட்டின் பின்புறம் சிறுநீர் கழிக்கசென்ற எனது 12 வயது மகள் பர்தா அணியவில்லை என்பதற்காக அவளுக்கு கடும் தண்டனை அளித்தனர்.
அவர்களிடம் வேலை செய்பவர்களுக்கு சரியாக சம்பளம் தர மாட்டார்கள். ஒருநாள், நான் வேலையை விட்டு நிற்கபோவதாக சொன்னதற்கு எனது தலையை தனியாக வெட்டி விடுவதாக மிரட்டினர்.
மேலும் அவர்கள் செய்யும் கொடூரமாக கொலைகளை பார்க்க சொல்லி கட்டாயப்படுத்தினர். மேலும் எங்களை மனித கேடயமாகவும் பயன்படுத்தினர் என்று தெரிவித்துள்ளார்.