சிங்கள,தமிழ் மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும்:விக்­னேஸ்­வரன்!

0
545

vikiதமிழ் மக்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் ஒரு மாநி­ல­மா­கவும் சிங்­கள மக்கள் வாழும் ஏனைய மாகா­ணங்கள் இன்­னொரு மாநி­ல­மா­கவும் பிர­க­டனம் செய்­யப்­ப­ட­வேண்டும். முஸ்லிம் மக்­க­ளுக்கு வடக்கு, கிழக்கில் தன்­னாட்சி பிராந்­திய சபை உரு­வாக்­கப்­ப­டு­வ­துடன் தெற்கில் மலை­யக மக்­க­ளுக்கும் தன்­னாட்சிப் பிராந்­தியம் உரு­வாக்­கப்­பட வேண்டும் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

வட­மா­காண சபையின் அர­சியல் தீர்வு மற்றும் அர­சியல் யாப்­புக்­கான கொள்கை வரைபு முன்­மொ­ழி­வு­க­ளுக்­கு­ரிய முன்­னு­ரையின் போதே முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் இதனை சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

வட­மா­காண சபையின் 49 ஆவது அமர்வு கைத­டியில் அமைந்­துள்ள பேரவைக் கட்­ட­டத்தில் நேற்­றைய தினம் வட­மா­காண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவ­ஞானம் தலை­மையில் இடம்­பெற்­றது. இதன்­போது அர­சியல் தீர்வு மற்றும் அர­சியல் யாப்­புக்­கான கொள்கை வரைபு முன்­மொ­ழி­வு­களை சபையில் முன்­வைத்து முத­ல­மைச்சர் உரை­யாற்­றினார்.

வட­மா­காண சபை­யா­னது அர­சியல் தீர்வு மற்றும் அர­சியல் யாப்­புக்­கான கொள்கை வரை­புக்கு திட்­ட­மொன்­றினை தயா­ரித்­துள்­ளது. அந்த திட்­டத்­தினை தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு தலைவர் இரா.சம்­பந்­த­னிடம் கைய­ளிக்க திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. இந்த நிலை­யி­லேயே கொள்­கை­வ­ரைவு முன்­மொ­ழி­வு­களை நேற்று முத­ல­மைச்சர் சபையில் முன்­வைத்தார்.

அவர் தனது உரை­யின்­போது மேலும் தெரி­வித்­த­தா­வது,

வட­மா­காண சபையின் மக்கள் பிர­தி­நி­தி­க­ளா­கிய நாங்கள் அர­சாங்­கத்தால் தயா­ரிக்­கப்­படும் புதிய அர­சி­ய­ல­மைப்போ அல்­லது அர­சியல் தீர்­வுக்­கான முன்­மொ­ழி­வு­களோ பின்­வரும் கொள்கை முன்­மொ­ழி­வு­களை கருத்திற் கொள்­ளல்­வேண்டும் என முடி­வு­செய்­கின்றோம்.

இந்­தி­யாவில் மாநி­லங்கள் மொழி ரீதி­யாகப் பிரிக்­கப்­பட்­டி­ருப்­பதைப் போன்று இலங்­கை­யா­னது அடிப்­ப­டையில் இரண்டு பரந்த மாநி­லங்­க­ளாக, அதா­வது பெரும்­பான்­மை­யாகத் தமிழ்ப் பேசும் பிர­தே­சத்தைக் கொண்ட வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் ஒரு மாநி­ல­மா­கவும் மற்றும் பெரும்­பான்­மை­யாகச் சிங்­களம் பேசும் மக்­களைக் கொண்ட ஏனைய ஏழு மாகா­ணங்கள் இன்­னொரு மாநி­ல­மா­கவும் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­படல் வேண்டும்.

இவ்­விரு பரந்த மொழி ரீதி­யான மாநி­லங்­க­ளிலும் தமிழ்ப் பேசும் முஸ்­லிம்கள் வடக்கு மற்றும் கிழக்கில் ஓர் அல­கா­கவும் தமிழ்ப் பேசும் மலை­யகத் தமி­ழர்கள் நாட்டின் ஏனைய பகு­தியில் ஓர் அல­கா­கவும் இனங்­கா­ணப்­பட்டு, அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டல்­வேண்டும்.

சிங்­களம் பேசு­வேரைக் கொண்ட மாநி­ல­மா­னது அத­னுள்ளே பிரிக்­கப்­படல் வேண்­டுமா என்ற கேள்­வி­யா­னது சிங்­கள மக்­களால் தீர்­மா­னிக்­கப்­படல் வேண்டும்.

பெரிய நக­ருக்­கு­ரிய கொழும்புப் பகு­தி­யா­னது தனி­யா­னதோர் நிர்­வா­கத்தைக் கொண்டு நாட்டின் தலை­நகர் அல­காக அங்­கீ­க­ரிக்­கப்­படல் வேண்டும்.

தொடர்ச்­சி­யாக இந்த ஆவ­ணத்தில் ஒப்­பிக்­கப்­பட்­டி­ருக்கும் வர­லாற்று ரீதி­யான பின்­புலம் மற்றும் 1833ஆம் ஆண்­டுக்கு முன்­னரும் பின்­னருந் தமிழ்ச் சமூ­கத்தால் நூற்­றாண்­டு­க­ளாகப் பேணப்­பட்டு வந்த தனித்­து­வத்­தன்­மையின் அடிப்­ப­டையில் எந்­த­வொரு சமூ­கத்தைச் சேர்ந்த மக்­களும் ஏனைய சமூ­கங்­களில் ஆதிக்கம் செலுத்­தவோ அல்­லது அவர்­களில் தங்­கி­யி­ருப்­ப­வர்­க­ளாக இருக்கும் வகையில் அவர்­களைச் சார்ந்­தி­ருக்­கவோ வேண்­டி­ய­தில்லை என்­பதை உறுதி செய்து கொள்­வ­தற்கும், ஒற்­றை­யாட்சி முறைக்­கு­ரிய அர­சாங்­கத்­துக்குப் பதி­லாக கூட்­டாட்சி சமஷ்டி முறைக்­கு­ரிய அர­சாங்­க­மொன்றை நிறுவ வேண்­டி­யது அத்­தி­யா­வ­சி­ய­மா­கின்­றது. இலங்கைப் பிரஜை ஒவ்­வொ­ரு­வரும் சட்­ட­ரீ­தி­யாக இன்­னொ­ரு­வ­ருக்குக் கீழா­னவர் என அவனோ அல்­லது அவளோ உணர்­வ­தற்­கு­ரிய வழி­மு­றையை இல்­லா­தொ­ழிப்­பது உறுதி செய்­யப்­ப­ட­வேண்­டி­யது அத்­தி­யா­வ­சி­ய­மாகும். வெறும் எண்­ணிக்­கையில் பெரும்­பான்­மை­யா­க­வி­ருக்கும் அவ­னு­டைய அல்­லது அவ­ளு­டைய சமூ­கங்கள் சட்­ட­ரீ­தி­யாக ஏனை­யோ­ரி­ட­மி­ருந்து தமக்­கென்று அளவு மீறிய பயனைக் கோரக்­கூ­டாது.

வட,கிழக்கி் மாநில பாரா­ளு­மன்றம்

இலங்­கையில் தமிழ் பேசு­வோரைக் கொண்­டுள்ள வடக்கு மற்றும் கிழக்குப் பிர­தே­சங்­க­ளினுள் தற்­போ­தைய வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களின் ஒன்­றி­ணைத்­த­லின்­போது முஸ்லிம் தன்­னாட்சி பிராந்­திய சபை­யா­னது உரு­வாகும். இத்­தன்­னாட்சிப் பிராந்­தி­யத்தின் நிலை, பரி­மாணம் மற்றும் நியா­யா­திக்க எல்­லைகள் ஆகி­யன தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களின் பிர­தி­நி­தி­க­ளுக்­கி­டையில் கலந்­து­ரை­யா­டப்­பட்டு முடிவு செய்­யப்­ப­ட­வேண்டும். மொழி ரீதி­யி­லான தமிழ் பேசும் வட­கி­ழக்கு மாநி­ல­மா­னது மாநிலப் பாரா­ளு­மன்­றத்தைக் கொண்­டி­ருக்கும்.

மலை­யக தன்­னாட்சிப் பிராந்­தியம்

மலை­யகத் தமி­ழர்­க­ளுக்­காக அதே­போன்ற ஒழுங்­குகள் சிங்­கள மொழி­ரீ­தி­யான மாநி­லத்­தினுள் மேற்­கொள்­ளப்­ப­டல்­வேண்டும். அதி­கா­ர­மா­னது ஒரு சமூ­கத்தில் குவிக்­கப்­படும் அபா­யத்தைத் தவிர்த்து அதி­கா­ரங்கள் சகல சமூ­கங்­க­ளுக்­கி­டை­யேயும் சம­னாகப் பகி­ரப்­ப­டு­வதை முழு நாட்­டி­னதும் பாரா­ளு­மன்றப் பிர­தி­நி­திகள் உறுதி செய்தல் வேண்டும்.

எது எவ்­வாறு இருப்­பினும் வட­கி­ழக்கு மாநிலம் மற்றும் முஸ்லிம் தன்­னாட்சிப் பிராந்­தியம் மற்றும் மலை­யகத் தமிழ் தன்­னாட்சிப் பிராந்­தியம் பாதிக்­கத்­தக்­க­வாறு மத்­திய கூட்­டாட்சி சமஷ்டிப் பரா­ளு­மன்­றத்தால் இயற்­றப்­படும் சட்­டங்கள் உரிய மாநி­லத்­தாலோ அல்­லது தன்­னாட்சிப் பிராந்­தி­யங்­க­ளாலோ அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத வரை நடை­மு­றைக்கு வரக்­கூ­டாது.

வட­கி­ழக்கு மாநிலப் பாரா­ளு­மன்றம், வட­கி­ழக்கு முஸ்லிம் பிராந்­திய சபை அதேபோல் மலை­யகத் தமிழ்ப் பிராந்­திய சபை ஆகி­ய­வற்­றுக்கு தமது சொந்த அலு­வல்­களை மேற்­கொள்­வ­தற்கு ஏற்ற வகையில் முழு­மை­யாக அதி­கா­ரங்கள் ஒப்­ப­டைக்­கப்­படல் வேண்டும்.இப்­பா­ரா­ளு­மன்­றத்­துக்கும் பிராந்­திய சபை­க­ளுக்கும் போதி சுயாட்­சி­யா­னது ஏற்­பாடு செய்­யப்­படல் வேண்டும். இலங்­கையை விடப் பரப்­ப­ள­விலும் குடித்­தொ­கை­யிலும் சிறிய நாடா­கிய சுவிற்­சர்­லாந்தில் நடை­மு­றை­யி­லுள்ள கன்டோன் நாட்டுப் பிரிவு முறை­மை­யா­னது அவ­சி­ய­மான மாற்­றங்­க­ளுடன் இங்கு சுவீ­காரஞ் செய்­வ­தற்­காகப் பரி­சீ­லிக்­கப்­ப­ட­மு­டியும். தமிழ்ப்­பேசும் மாநில அரசில் மத்­தியைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முகவர் நிறை­வேற்று அதி­காரம் எவற்­றையும் கொண்­டி­ருக்­க­மாட்டார். அவை மாநி­லத்தின் அமைச்­ச­ர­வை­யி­னா­லேயே முழு­மை­யாக தன்­னு­டை­மை­யாக்­கப்­படும்.

அர­ச­க­ரும மொழி

இலங்­கையின் அர­ச­க­ரும மொழிகள் சிங்­க­ளமும் தமிழும் ஆவ­துடன் ஆங்­கி­ல­மா­னது இணைப்பு மொழி­யா­கவும் இருத்­தல்­வேண்டும். வட­கி­ழக்கு மாநி­லத்­தி­லுள்ள சகல பதி­வு­களும் நட­வ­டிக்­கை­களும் சிங்­கள மற்றும் ஆங்­கில மொழி­பெ­யர்ப்­புகள் பேணப்­பட்டு தமிழ் மொழியில் இருத்தல் வேண்டும். மலை­யகத் தமிழ்ப் பிராந்­திய சபை தவிர்ந்த தீவின் மீதிப்­பா­கத்தில் பேணப்­படும் சக­ல­ப­தி­வு­க­ளும்­மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கை­களும் தமிழ் மற்றும் ஆங்­கில மொழி­பெ­யர்ப்­புகள் பேணப்­பட்டு சிங்­க­ளத்தில் இருத்­தல்­வேண்டும். மலை­யகப் பிராந்­தி­யத்­திய சபை­களில் பேணப்­படும் சகல பதி­வு­களும் மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கை­களும் தமி­ழிலோ சிங்­க­ளத்­திலோ நடை­பெ­றலாம். அவற்றின் தமிழ் அல்­லது சிங்­கள மொழி­பெ­யர்ப்பும் ஆங்­கி­ல­மொழி பெயர்ப்பும் பேணப்­ப­ட­வேண்டும்.

புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்றை உரு­வாக்­கு­கையில் தொடர்ச்­சி­யாக வந்த மத்­திய அர­சாங்­கங்­களால் சுற்­றயல் நிர்­வா­கங்­களை வலி­தற்­ற­தாக்­கு­வதன் பொருட்டு இது­வரை வேண்­டு­மென்றே மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கைகள் இல்­லா­தொ­ழிக்­கப்­ப­டல்­வேண்டும்.

அவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் பின்­வரும் சந்­தர்ப்­பங்­களில் நிகழ்ந்­துள்­ளன.

1979ஆம் ஆண்டு நிறு­வப்­பட்ட மகா­வலி அதி­கா­ர­சபை போன்ற அர­சியல் மற்றும் நிர்­வாக அதி­கா­ர­ச­பை­களின் தொடர்ச்­சி­யா­னது மக்­களால் தேர்வு செய்­யப்­பட்ட உள்­நாட்டு மாகாண சபை­யினால் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத, மாகாண எல்­லை­களை மீறிய புக­லிட நட­வ­டிக்­கை­களை மேம்­ப­டுத்­து­வ­தற்கு அனு­ம­தித்­துள்­ளது.

1992ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க அதி­கா­ரங்­களை மாற்­றி­ய­மைக்கும் (பிர­தேச செய­லர்கள்) சட்­ட­மா­னது அரச அதி­பர்­க­ளையும் பிர­தேச செய­லர்­க­ளையும் மாகாண நிர்­வா­கத்தின் நோக்­கெல்­லைக்கு அப்­பாற்­ப­டுத்தி அதன்­மூ­ல­மாக ஓர் இரட்டை நிர்­வாக ஒழுங்­க­மைப்­பினைத் தோற்­று­வித்­துள்­ளது.

மத்­திக்கும் அய­லுக்­கு­மி­டையே ஒருங்­கி­யல்­பான நியா­யா­திக்­கத்தை ஒழுங்கு செய்­வதன் மூல­மாக மாகாண நிர்­வா­கத்தை வலி­தற்­ற­தாக்கி மத்­தி­யா­னது அதி­காரம் செலுத்­தி­யது. இதன்­பின்னர் ஒருங்­கி­யல்­பான நியா­யா­திக்­க­மா­னது தோற்­று­விக்­கப்­ப­டக்­கூ­டாது. மாநில மற்றும் சமஷ்டி கூட்­டாட்­சிக்­கு­ரி­ய­தாக மாத்­திரம் அதி­கா­ரங்கள் பகி­ரப்­ப­ட­வேண்டும்.

ஒவ்­வொரு மாநில அர­சாங்­கத்­தி­னதும் தன்­னாட்சிப் பிராந்­திய அர­சாங்­கத்­தி­னதும் சுயாட்­சி­யா­னது கூட்­டாட்சி சமஷ்டி அர­சாங்­கத்தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு உறு­திப்­ப­டுத்­தப்­ப­டல்­வேண்டும்.

சகல பிர­ஜை­க­ளுக்­கி­டை­யிலும் அவர்­க­ளு­டைய மொழி, மதம், சாதி, கோட்­பாடு அல்­லது பிர­தேசம் எவ்­வ­றி­ருப்­பினும் சமத்­துவக் கொள்­கை­யா­னது வலி­யு­றுத்­தப்­ப­டு­வ­துடன் அர­சியல், நிர்­வாக, கல்வி, பொரு­ளா­தார மற்றும் தொழில் அடங்­க­லாக ஏனைய சகல துறை­க­ளிலும் சகல சமூ­கங்­க­ளுக்கும் மதிப்­ப­ளிப்பு ஏற்­பாடு செய்­யப்­ப­டல்­வேண்டும். அரச சேவை­யிலும் அர­சாங்­கத்தின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள கூட்­டுத்­தா­ப­னங்­க­ளிலும் சகல பிர­ஜை­க­ளுக்கும் தொழில் வாய்ப்­புக்கு சம வாய்ப்­புக்கள் உறுதி செய்­யப்­ப­டல்­வேண்டும்.

இரு­மொ­ழியில் தேசிய கீதம்

ஒவ்­வொரு மாண­வரும் தேசிய மொழி­க­ளிலும் இணைப்பு மொழி­யிலும் தேர்ச்­சி­பெற்­றி­ருப்­பதைக் கட்­டா­ய­மாக்­கு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட அனு­ம­திக்­கப்­ப­ட­வேண்டும்.

குடி­ய­ரசின் கொடி­யா­னது மக்கள் பிரி­வு­களைப் பிர­தி­ப­லிக்கும் விதத்தில் இருப்­பதை இல்­லா­தொ­ழிக்க வேண்டும். தேசிய கீத­மா­னது சந்­தர்ப்­பத்­துக்கு ஏற்ற வகையில் சிங்­க­ளத்­திலோ அல்­லது தமி­ழிலோ அல்­லது இரு மொழி­க­ளி­லுமோ பாடப்­ப­டல்­வேண்டும்.

தமிழ்­பேசும் மக்­க­ளுக்கு எதி­ரான அரச அங்­கீ­காரம் பெற்ற பாட­சாலைப் புத்­த­கங்­க­ளி­னூ­டான நிலைப்­பே­றான நிகழ்ச்­சி­நி­ர­லா­னது இல்­லா­தொ­ழிக்­கப்­ப­டல்­வேண்டும்.. இலங்­கையின் வர­லா­றா­னது பிரி­வுசார் அல்­லது வட்­டா­ரம்சார் கோரிக்­கை­க­ளுக்குப் பணிந்­தி­ராது, சர்­வ­தேசத் தரா­த­ரங்­க­ளுக்கு அமை­வாக சரி­யாக வரை­யப்­ப­டல்­வேண்டும்.

மாநில எல்­லைக்­குட்­பட்ட அரச நிலங்கள் மாநில அர­சாங்­கத்தின் கட்­டுப்­பாட்­டுக்கும் நோக்­கெல்­லைக்குங் கீழாக வரு­தல்­வேண்டும். அந்­நிலம் அப்­பி­ரி­வி­லுள்ள மக்­களின் நன்­மைக்­காகப் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள போது சமஷ்டி கூட்­ட­ர­சாங்­க­மா­னது மாநில அர­சாங்­கத்தின் அல்­லது பிராந்­திய அர­சாங்­கத்தின் சம்­மதம் அல்­லது இசைவு இன்றி அந்­நி­லத்தின் மீது எந்த அதி­கா­ரங்­க­ளையும் பிர­யோ­கிக்க முடி­யாது.

பொலிஸ்­அ­தி­காரம்

மாநில அர­சாங்­கத்­துக்கு முழு­மை­யான பொலிஸ் அதி­கா­ரங்கள் வழங்­கப்­படல் வேண்டும். சமஷ்டி கூட்­ட­ர­சுக்­கு­ரிய பொலி­ஸா­னது மாநி­லத்தில் அல்­லது பிராந்­தி­யத்தில் ஒழுங்­க­மைப்­ப­டு­வதில் எவ்­வித ஆட்­சே­ப­னை­யு­மில்லை.

தீவி­ர­வாதத் தடுப்பு (தற்­கா­லிக) ஏற்­பா­டுகள் சட்டம் நீக்­கப்­பட்டு நாட்டின் பொது­வான குடி­யியல் சட்­ட­மா­னது மீண்டும் கொண்­டு­வ­ரப்­ப­டல்­வேண்டும்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒழுங்­குகள் இனம், மதம், மொழி, கோட்­பாடு, சாதி மற்றும் பண்­பாட்டைச் சார்ந்­தி­ராது சகல சமூ­கங்­க­ளுக்­கி­டை­யிலும் சமூக அக்­க­றையை உறு­தி­செய்து தனிப்­பட்ட பிர­ஜைகள் சட்­ட­வி­தி­க­ளுக்கும் உரி­மை­க­ளுக்கும் சுய­உ­ரி­மை­க­ளுக்கும் மதிப்­ப­ளித்­தலை மேம்­ப­டுத்தி பாரா­ளு­மன்ற ஜன­நா­ய­கத்தின் நேரான இலட்­சி­யங்­களைத் தொடர வழி அமைக்­கப்­ப­ட­வேண்டும்.

நவீன கண்காணிப்பு முறைகளின் காரணமாக போர் முடிவுற்றமையைத் தொடர்ந்து வடக்கிலும் கிழக்கிலும் இராணுவப்படைகளைக் கண்காணிப்புப் பணிகளுக்காக நிலைநிறுத்த வேண்டிய அவசியப்பாடானது தேவைக்கு மிகையானது. முன்னாள் போராளிகளை பொது வாழ்க்கையினுள் மீளக்கொண்டுவருவதன் பொருட்டு படைக்குறைப்பு, படைக்கலைப்பு மற்றும் மீளவொருங்கமைத்தல் செயன்முறையானது மேற்கொள்ளப்படல் வேண்டும்.

அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காகப் பணிக்கப்பட்டுள்ள பெரும்பான்மை சமூகத்தினரை அதிக எண்ணிகையில் கொண்டுள்ள அரசியலமைப்புச் சபை, அதன் பக்கச்சார்பான பிரதிநிதிகளின் தொகையை மனதில் வைத்து தேசிய பிரச்சினைக்கு நிரந்தரமானதும் நிலைத்திருக்கத்தக்கதுமானதோர் தீர்வை உறுதிசெய்வதன் பொருட்டு தமிழ் பேசும் மக்களின் தொடர்ச்சியான வரலாற்று ரீதியான வாழிடமாகவுள்ள பிரதேசங்களில் அவர்களின் தனித்வத்தன்மைக்கு ஏற்றவகையில் அவர்களின் உரிமைகளை அங்கீகரிப்பதற்காக அரசாங்கத்துக்கும் தமிழ்த்தலைமைத்தவங்களுக்கும் இடையில் ஓர் ஆரம்ப இணக்கப்பாடானது எய்தப்படல் வேண்டும். இந்த இணக்கப்பாட்டில் தமிழ்த் தலைவர்கள் தமது மக்கள் சார்பாகக் கூறும் விடயங்கள் ஒரு தனிப்பட்சமாக பெரும்பான்மை சிங்களம் பேசும் உறுப்பினர்களால் புறக்கணிக்கப்பட்டால் தமிழ்பேசும் மக்கள் தமது வாழ்விடங்களில் மக்கள் தீர்ப்பைப் பெற்று தமது அரசியல் நிலையை உறுதி செய்வதற்கு குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும். அவ்வாறானதோர் இணக்கப்பாடானது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அல்லது ஏனைய நட்பு நாடுகளால் காப்பீடு செய்யப்படல்வேண்டும் எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here