வடக்கு மாகாணசபையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வு திட்ட யோசனைக்கான முன்வரைபு வட மாகாண முதலமைச்சர் சி.க.விக்னேஸ்வரனால் நேற்றையதினம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணசபையின் 49 ஆவது அமர்வு கைதடி யில் அமைந்துள்ள வட மாகாண சபை கட்டடத்தில்
நேற்றையதினம் நடை பெற்றது. அதன்போதே வடமாகாண முதலமைச்சரால் குறித்தஅரசியல் தீர்வுத் திட்டவரைபு முன்மொழியப்பட்டது.
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கையில் அரசு முன்னெடுக்கப்பட்டுவரும் நிலை யில் வட மாகாணசபையால் அரசியல் தீர்வுதிட்டவரைபு சமர்ப்பிக்கப்படவேண்டும் என ஆளும் கட்சி உறுப்பினர்கள் முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தமைக்கு அமைவாக கடந்த ஜனவரி மாதம் வட மாகாணசபையில் தீர்வுத்திட்ட தயாரிப்பதற்கு குழு நியமிக்கப்பட் டது.
இதில் 18 பேர் இணைந்து 3 பிரிவுகளாகஅரசியல் தீர்வுத்திட்ட வரைபு தயாரிக்கும் நடவடிக்கைகளை மேற் கொண்டிருந்தது.
குறித்த வரைபு பூரணப்படுத்தப் படுவதற்கு முன்னர் தீர்வுத்திட்டம் தொடர்பாக முன்மொழிவை நேற் றையதினம் சபையில் தெரிவித்து விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப் பட்டது.
அந்தவகையில் திட்டவரைபில் திருத்தங்களை மேற்கொண்டு எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெற வுள்ளவிசேட அமர்வில் தீர்வுத் திட்டத்துக்கான மேலதிக விவாதங்கள் இடம்பெற்று அரசியல் தீர்வுத்; திட்ட வரைபு முழுமைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.