பிரான்சில் இடம்பெற்ற ஏவ்றி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 20 ஆவது ஆண்டு விழா! (காணொளி)

0
824

பிரான்சு ஏவ்றி நகரத்தில் அமைந்துள்ள ஏவ்றி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 20 ஆவது ஆண்டு விழா கடந்த 03.04.2016 ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்று முடிந்தது.IF அன்றையதினம் பிற்பகல் 2 மணியளவில் ஏவ்றி தமிழ்ச்சோலை நிர்வாகி திரு.சட்டநாதர் மனோகரன் அவர்கள் மங்கள விளக்கினை ஏற்றிவைக்க ஆரம்பமான இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை கடற்கரும்புலி லக்ஸ்மன் அவர்களின் மைத்துனி ஏற்றிவைத்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து அரங்கின் முன்பாக வைக்கப்பட்டிருந்த மங்கள விளக்குகளை ஏவ்றி தமிழ்ச்சோலை ஆசிரியைகள் அணியாக ஏற்றிவைத்தனர்.IF
தொடர்ந்து ஏவ்றி தமிழ்ச்சோலை மாணவர்களால் பாடசாலைக் கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து புஞ்பாஞ்சலி இடம்பெற்றது. திருமதி நாதன்சோபா அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, ஏவ்றி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.பொன்னம்பலம் பாலகுமாரன் அவர்கள் தமிழ் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் தலைமையுரை ஆற்றினார்.

IF
தொடர்ந்து மாணவர்களின் அரங்க நிகழ்வுகள் மேடையை அலங்கரித்தன. பரதநடனம், எழுச்சி நடனம், கும்மி நடனம், கிராமிய நடனம், நாடகம், கோலாட்டம், சான்றோர் சிந்தனைகள், வில்லுப்பாட்டு, பாப்பா பாட்டு, வாழ்த்துவோர் வாழ்த்தலாம், காத்தவராயன் கூத்து என பெருமளவான மாணவர்களின் நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தன.IF
ஏவ்றி தமிழ்ச்சோலை பழையமாணவர்கள், ஆசிரியர்கள், தமிழ்ச்சோலை நிர்வாகி ஆகியோர் மேடையில் சிறப்பு விருந்தினர்களால் மதிப்பளிக்கப்பட்டனர்.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் பரிசில்கள், சான்றிதழ்கள், நினைவுக் கேடயங்கள், நினைவுப் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்புவிருந்தினர்களால் மதிப்பளிக்கப்பட்டனர்.IFநிகழ்வில் சிறப்புரைகளை, தாயகத்தில் இருந்து வருகைதந்த வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் துணைத் தவிசாளர் திரு.சண்முகலிங்கம் சஜீவன் அவர்களும், பிரான்சு தமிழர் ஒருங்;கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. சத்தியதாசன் அவர்களும், பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியக உறுப்பினர் திரு.அகிலன் அவர்களும் ஆற்றியிருந்தனர்.IF
ஏவ்றி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 20 ஆவது ஆண்டு நினைவு மலரும் மேடையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இரவு உணவு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பார்வையாளர்களுக்கான போட்டியில் சரியான விடைகளை எழுதி வெற்றிபெற்றவருக்கான பரிசில் வழங்கப்பட்டது.
நிறைவாக அதிர்ஷ்டலாப சீட்டு அதிர்ஷ்டம் பார்க்கப்பட்டு வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.
நன்றியுரையினை திரு.பாலச்சந்திரன் அவர்கள் ஆற்றினார். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு

IF

IF

IF

IF

IF

IF
IF
IF
IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF
IF

IF

IF
IF

IF

IF

IF
IF
IF
IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF
IF

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here