
மயக்கமடைந்த நிலையில் பூநகரி வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை அனுமதிக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வைத்தியதிகாரி என்.சிவரூபன் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டார். உடலில் நீர்த்தன்மை குறைந்தமையால் இந்தப் பெண் உயிரிழந்ததாக வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.