மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே உள்ள கடற்பகுதியில் வைத்து மலேசிய மாலுமிகள் நால்வர் துப்பாக்கிதாரிகளால் கடத்தப்பட்டுள்ளனர்.
குறித்த கடற்பகுதியில் இஸ்லாமியவாத தீவிரவாதிகள் செயற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் அக்கடற்பகுதியில் விசைப்படகு ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த 10 இந்தோனேஷியப் பிரஜைகள், அபு சயீஃப் என அழைக்கப்படும் பிலிப்பைன்ஸ் இஸ்லாமியவாதக் குழுவால் கடத்திச் செல்லப்பட்டிருந்தனர்.
கடத்தப்பட்ட இந்தோனேஷியர்களை விடுவிக்க பெருந்தொகை கப்பம் கோரியுள்ளனர் தீவிரவாதிகள்.
இந்நிலையில், இந்தக் கடத்தல் சம்பவம் மலேசிய கடற்பகுதியிலா அல்லது சர்வதேச கடல் எல்லையிலா இடம்பெற்றது என்பதை பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.