யாழ்.அச்சுவேலி தெற்கு பிள்ளையார் வீதி பகுதியில் வீட்டில் இருந்தவர்களை கத்தி முனையில் அச்சுறுத்தி பெருமளவு நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையிட்ட சம்பவம் இன்றைய தினம் அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி என்.கே.ஜெயசிங்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இன்று அதிகாலை 2 மணியளவில் குறித்த பகுதியில் உள்ள மூன்று வீடுகளில் நூழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை ஆயுத முனையில் அச்சுறுத்தியுள்ளனர்.
அத்துடன் கொள்ளையடிக்க சென்றவர்கள் தங்களது மூகத்தை கறுப்பு துணிகளால் மறைத்திருந்துடன் சிங்களத்திலும் அச்சுறுத்தியுள்ளனர்.
மேலும் வீட்டில் இருந்தவர்களை கதவினை திறக்குமாறு கூறி அச்சுறுத்தியிருந்துடன், வீட்டின் கதவினை உடைத்து உள் நுழைந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து வீட்டில் இருந்தவர்களை கத்தி முனையில் பணிய வைத்து வீட்டை சல்லடை போட்டு தேடி அங்கிருந்த பொருட்களை களவாடி சென்றுள்ளனர்.
இதன் போது ஒர் வீட்டில் இருந்து 12 பவுண் நகையும் மற்றொரு வீட்டில் 25ஆயிரம் ரூபா பணமும் மோதிரங்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
அத்துடன் கொள்ளையில் ஈடுபட்ட வீடொன்றில் கொள்ளையர்கள் தமது துவிச்சக்கர வண்டி இரண்டையும் கத்திகளையும் வீட்டு சென்றுள்ளனர்.
இதேவேளை அதிகாலை மூன்று மணியளவில் இராச பாதை பரந்தன் சந்தியில் வைத்து பட்டா ரக வாகனத்தில் வந்தவர்களை பொலிஸார் சோதனையிட முயன்ற போது அதில் இருந்த மூவர் தப்பிச் சென்றதாகவும்,
இதன்போது பட்டா வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் இவர்களே இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எனவும் தப்பி சென்றவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் பொறுப்பதிகாரி என்.கே.ஜெயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.