மே 18 – தமிழின அழிப்பு நாள்” – துண்டுப்பிரசுரங்கள்!

0
522

வணக்கம்,
“மே 18 – தமிழின அழிப்பு நாள்”
18.05.2016 புதன், 14.30 -17 மணி
பேர்ண் பாராளுமன்ற முன்றலில்.

நடைபெற்ற இனப்படுகொலையை மறைப்பதற்கு சிறீலங்கா அரசு பெருமெடுப்பில் தனது வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதனால்,
அதை முறியடித்து உண்மைநிலையை வெளிக்கொணர கடுமையாக உழைக்கவேண்டியது தமிழர் அனைவரினதும் கடமை. இவ்வருட மே 18 தமிழின அழிப்பு நாளில் வழமைக்கு மாறாக பல்லாயிரக்கணக்கான மக்களை ஒன்றுகூட்டி மிக ஆழமான பதிவை சுவிஸ் அரசிற்கும், வெளிஉலகிற்கும் எடுத்துரைப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இதன் அவசியத்தை உணர்ந்து மக்களை ஒன்று திரட்டும் பணியானது எமது அனைவரினது தேசியக்கடமையாக உள்ளதனால் விரைவாக அணிதிரட்டும் பணியினை மேற்கொள்வதோடு பல்லாயிரக்கணக்கான மக்களை அழைத்து வருவதென சபதம் எடுத்து எம் பணிகளை ஆரம்பிப்போம்!!!.
——————————
நன்றி.
சுவிஸ் ஈழத்தமிழரவை

துண்டுப்பிரசுரங்கள்1 துண்டுப்பிரசுரங்கள்2 18.05.2016-புதன்1-600x427 18.05.2016-புதன்2-600x427

சுவிஸ் ஈழத்தமிழர் அவையானது சுவிஸ் வாழ் ஈழவம்சாவழித் தமிழர்களின் (சுவிஸ் ஈழத்தமிழர்) ஐனநாயகப் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. சுவிஸ் ஈழத்தமிழர் அவையானது சுவிஸ் பூராவும் இயங்கும். இவ் அவையானது சுவிஸ் வாழ் ஈழத்தமிழர்களின் விடயங்களை தேசிய மற்றும் சர்வதேசரீதியில் கையாள்வதுடன் தாயகத்திலுள்ள ஈழத்தமிழர்களின்; உரிமைகளுக்காக ஆணை பெற்ற அவை என்ற வகையில் குரல் கொடுக்கும். அவையின் பணிகள் சுவிஸ் நாட்டின் சட்டங்கள், கட்டுப்பாடுகள் மற்றும் நிஐமங்களை உளள்டக்கியே முன்னெடுக்கும்

Swiss Council of Eelam Tamils (SCET)
Wegmühlegässli 60, 3072 Ostermundigen
+41 (0) 79 193 86 69 / +41 (0) 32 631 05 27
Webseite: www.scet.ch
Mail: info@scet.ch

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here