தமிழ் மாணவர்கள் மீது 150 சிங்கள மாணவர்கள் தாக்குதல்!

0
213
9589ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக் கழகத்தில்  சுமார் 150க்கு மேற்பட்ட சிங்கள மாணவர்களாhல் கடுமையான தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட8 தமிழ் மாணவர்கள் பதுளை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில்  2 ஆம் வருடத்தில் கல்வி  கற்கும் தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்கும் இடையில் சமீப காலமாக கருத்து முரண் பாடு இருந்து வந்துள்ளது. அங்குள்ள சிங்கள கலாசார சங்கத்தில் உள்ள மாணவர்கள் தமிழ் மாணவர்களை பல்கலைக்கழகத்தில் உள்ள சிற்றுண்டிசாலைக்குள் வரக் கூடாது எனக் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்றுமுன் தினம் இரவு உலகக் கிண்ண போட்டி கிரிக்கெட் போட்டி பார்ப்பதற்கென தொலைக்காட்சி வைக்கப்பட்டிருந்த சிற்றுண்டிச்சாலைக்குள் தமிழ் மாணவர்கள் சென்றுள்ளனர். அவர்கள் கிரிக்கெட் போட்டி முடிந்து வெளியில் வந்தபோது 150க்கு மேற்பட்டசிங்கள மாணவர்கள் இணைந்து தமிழ் மாணவர்கள் மீதுதடிகள் பொல்லுகளால் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது பல்கலைக் கழக காவலாளிகள் உட்படவேறு சிலர் சம்பவ இடத்துக்கு வந்து தமிழ் மாணவர்கள் மீதான தாக்குதலை தடுத்துள்ளனர்.

இத் தாக்குதலில் 4ஆம் வருடத்தில் கற்கும் ஒருமாணவனும், 3ஆம் வருடத்தில் கற்கும் 2 மாணவர்களும் 2ஆம் வருடத்தில் கல்வி கற்கும் 5 மாணவர்களும் படுகாயமடைந்த நிலையில் பதுளை மாவட்ட வைத் தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவத்தால் பதற்றமடைந்த ஏனைய தமிழ் மாணவர்கள் தமது பிரதேசத்துக்கு வருவதற்காக ஆயத்தமாகிய போது குறித்த சிங்கள கலாசார மாணவர்களால் மிரட்டலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பல்கலைக் கழகத்தில் மோசமடைந்துள்ள நிலையை அறிந்த அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் உடனடியாக ஒரு குழுவை சம்பவ இடத்துக்கு நேற்றையதினம் மாலைஅனுப்பி வைத்துள்ளது.
தாக்குதலைத் தொடர்ந்து 2ஆம் வருட 3ஆம் வருட மாணவர்களுக்கான விடுதிகள் மூடப்பட்டு அனைத்து மாணவர்களையும் வெளியேறுமாறும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவும் பிறப்பித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here