இராணுவத்தினரின் முற்றுகைக்குள்ளும் யாழ். பல்கலைக் கழகத்தில் தேசிய தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம்

0
761

தமிழ் தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 60 வது பிறந்த தின நிகழ்வு இன்று  யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களினால் காலை அகவணக்கத்தின் ஆரம்பத்துடன் கொண்டாடப்பட்டதோடு தலைவர் பிரபாகரனின் தமிழ் தேசிய வாசகங்களும் அங்காங்கே ஒட்டி தமது உணர்வை தெரியப்படுத்தினர்.

ஆனாலும் இன்று அதன் பிற்பாடு இன்றிலிருந்து எதிர்வரும் 01.12.2014 வரை பல்கலைக்கழகத்தினுள் மாணவர்கள் உள்நுழைய தடை செய்யப்பட்டிருப்பதோடு பல்கலைக்கழக விடுதிகளில் இருந்து இன்று மாலைக்குள் அனைத்து மாணவர்களையும் வெளியேறுமாறும் பல்கலை நிர்வாகம் பணித்துள்ளது.

அதுமட்டுமின்றி பல்கலைக்கழக முன் பிரதான ராமநாதன்  வீதி மற்றும் குமாரசுவாமி வீதி எங்கும் இரவு மற்றும் அதிகாலை வரையிலும் ராணுவத்தினர் சிவில் உடையிலும் , தமது வாகனங்களில் ரோந்து நடைவடிக்ககளிலும் ஈடு பட்டிருப்பதை காண கூடியதாக இருந்தது.

praba-birthday_univer_004 praba-birthday_univer_003 praba-birthday_univer_002 praba-birthday_univer_001

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here