தனது மைத்துனரை கத்தியால் குத்திக் கொலை செய்த திருநெல்வேலி பனிக்கர் வீதியைச் சேர்ந்த யோகராசா சதீஸ் (வயது 28) என்பவருக்கு மரண தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நேற்று தீர்ப்பளித்தார்.
2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் திகதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் 5 முறை கத்திக்குத்துக்கு இலக்காகிய கந்தசாமி இதயன் என்பவர் உயிரிழந்தார்.
கடந்த 2007ஆம் ஆண்டு கந்தசாமி ஜெயனின் மனைவி திருநெல்வேலி பனிக்கர் வீதியிலுள்ள வீட்டில் தூக்கில் தொங்கி உயிரிழந்தார். தனது தங்கையின் மரணத்துக்கு மைத்துனனே காரணம் எனக் கருதிய சதீஸ், தனது மைத்துனரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்பட்டு அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் சதீஸைக் கைது செய்தனர்.
கத்தியால் குத்தி மரணம் விளைவித்த குற்றத்துக்காக சட்டமா அதிபர் திணைக்கள த்தினால் யாழ் மேல் நீதிமன்றில் குற்றப்பகிர் வுபத்திரம்; தாக்கல் செய்யப்பட்டுவழக்கு நடை பெற்றுவந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் சம்பவத்தை நேரில் கண்ட 4 சாட்சியங்கள் இருந்த போதிலும் 2 சாட்சியங்கள் வெளிநாடுசென்ற காரணத்தால் 2பேருடைய சாட்சியங்கள் மன்றில் பதிவுசெய்யப்பட்டன.
முதல் சாட்சியான சோமசுந்தரத்தின் மனைவி சாட்சியமளிக்கையில்தான் குளியலறையில் இருந்துவெளி யே வரும் போதுஒருசத்தம் கேட்டது. ஐயோ என்ன ஜெகன் குத்திப்போட்டான் என இதயன் கத்தினார். நான் அங்குபார்த்தபோது ஜெகன் கறுத்த ஜக்கட் அணிந்தபடி கத்தி ஒன்றுடன் அப்பகுதியில் இருந்து வெளியேறினார் என சாட்சியமளித்தார்.
அதேபோன்று அயல் வீட்டுக்காரரான சோமசுந்தரத்தின் மகன் சாட்சியமளிக்கையில்,
சம்பவம் நடைபெற்றநேரம் ஒருசத்தம் கேட்டது அப்போது நான் பார்த்தபோதுகறுப்பு ஜக்கட்டுடன் ஒருவர் செல்வதை கண்டேன் எனசாட்சிய மளித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக எதிரி சாட்சிய மளிக்கையில்,
நான் இந்தகொலையை செய்யவில்லை. சம்பவம் இடம்பெற்றநேரம் நான் கோண்டாவிலில் இருந்தேன் என தெரிவித்தார்.
இச் சம்பவம் குறித்து விசாரணை மேற் கொண்ட பொலிஸ் அதிகாரி சாட்சியமளிக்கையில், குறித்த சம்பவம் தொடர்பாக சதீசிடம் விசாரணை மேற்கொண்ட போது தனது வீட்டில் கத்தி இருப்பதாக தெரிவித்தபோது அதைக் கைப்பெற்ற சென்றோம். அவருடைய வீட்டில் சோதனை மேற்கொண்ட போது இரத்தக்கறையுடன் காற்சட்டையும் கறுப்புநிற ஜக்கட்டையும் கைப்பற்றினோம் எனசாட்சியமளித்து சான்றுப் பொருட்களை யும் மன்றில் ஒப்படைத்தார்.
அதேபோன்று மருத்துவ அதிகாரி சி.சிவரூபன் சாட்சியமளிக்கையில் மரணத்தை விளைவிக்கக்கூடிய ஆயுதத்தால் அவருடைய நெஞ்சுப்பகுதியில் காயம் விளைவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அனைத்து தரப்பு சாட்சியங்களையும் ஆராய்ந்து நீதிபதி தீர்ப்பளிக்கையில்,
சம்பவ தினத்தன்று குறித்தஎதிரி திருநெல்வேலி பனிக்கர் வீதியில் அமைந்துள்ள அவருடையமைத்துனராகிய இதயனுடைய வீட்டிற்குசென்றுஅவருடன் முரண்பட்டு அயல் வீடுவரை துரத்திச் சென்று கத்தியால் குத்திகொலை செய்தமை நியாயமான சந்தேகத்துக்கப்பால் எண்பிக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த கொலை குற்றத்துக்கு எதிரியை குற்றவாளி என மன்று தீர்ப்பளிக்கிறது
எதிரியிட்ம் ஏதாவது கூற விரும்புகிறீரா என கேட்டபோது எனக்கு அம்மா, அக்கா உள்ளனர் குடும்பத்தை நான்தான் பார்க்க வேண்டும். எனக்கு இன்னும் திருமணமாகவில்லை எனக்கு கருணை காட்டுமாறு கோரினார்.
எதிரி தரப்பில் ஆஜராகிய சட்டத்தரணி கருத்து தெரிவிக்கையில், மனித உரிமைகளை கடைப்பிடிக்கும் பொறுப்பில் இலங்கை உள்ளது. ஒருநபர் உயிர் வாழும் சுதந்திரத்தை யாரும் பறிக்க முடியாது. எனவே அவருக்கு அளிக்கப்பட விருக்கும் மரணதண்டனையை தவிர்த்து குறைந்த தண்டனை வழங்கும்படி மன்றை கேட்டுக் கொண்டார்.
அதன் பின்னர் நீதிபதி தீர்ப்பளிக்கையில், குற்றவாளி உண்மையை ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் தண்டனைகள் குறைவாக இருக்கும். எதிரி ஒத்துக்கொள்ளவில்லை எனவே சட்டத்தின் அடிப்படையில் அவருக்கு மரண தண்டனை விதித்து மன்றுதீர்ப்பளிக்கிறது.
இருப்பினும் நீதிபதியின் தனிப்பட்ட கருத்தாக குறித்த நபரின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு மரண தண்டனையை தவிர்க்குமாறு மாண்புமிகு ஜனாதிபதிக்கு கருணை விண்ணப்பம் நீதிபதியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.