
யாழ்.சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ32 பாதையில்உள்ள மறவன்புலவு பிரதேச வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் கடந்த புதன்கிழமை மீட்கப்பட்டது.
இதேவேளை, மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவை கமநலசேவைகள் நிலையத்திற்கு சொந்தமான காணியின் பின் பகுதியில் இருந்தும் கடந்த புதன்கிழமை மாலை ஒரு தொகுதி வெடிபொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதனையடுத்து மன்னார் மாவட்டத ;தில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டு வருவதாக தெரியவருகிறது. இதனடிப் படையில் ஏ14 மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் தள்ளாடி இராணுவமுகாமிற்கு முன்பாக சோதனை சாவடி பொலிஸாரால்அமை ககப்பட்டு வருகிறது.
நேற்று வியாழக்கிழமை அமைக்கப்பட்ட குறித்த சோதனை சாவடியூடாக செல்லும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்த ப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பயணிகள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலும் யுத்தகாலத்தில் இருந்த சோதனைகெடுபிடி மீண்டும் ஆரம்பித்து விடுமோ? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில்தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.