முறிகண்டியில் கனரக வாகனத்துடன் உந்துருளி மோதியதில் ஒருவர் பலி!

0
159
9556வேகக் கட்டுப்பாட்டை இழந்த உந்துருளி வீதியின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் மோதியதில் உந்துருளியை செலுத்தி வந்த நபர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று மாலை 5.00 மணியளவில் கிளிநொச்சி முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
இதில் வவுனியா கனகராயன்குளத்தை வசிப்பிடமாகவும் பண்டத்தரிப்பை சொந்த இடமாகவும் கொண்ட எஸ்.கலைச்செல்வன் (வயது-26) என்பரே பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
 வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கனரக வாகனம் ஒன்று நேற்று மாலை 5மணியளவில் முருகண்டி பிள்ளையார் ஆலயம் முன்பாக பயணத்தின் போது நிறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளையில் வவுனியா கனகராயன் குளத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி உந்துருளியில் குறித்த நபர் பயணித்தவேளை உந்துருளி வேகக்கட்டுப்பாட்டை இழந்து கனரக வாகனம் மீது பின்னால் மோதி யது.
இதில் படுகாயங்களுக்குள்ளான உந்துருளியை செலுத்திய நபர் உடனடியாக அங்கு நின்றவர்களால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்துத் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம் மரண விசாரணைகளுக்காக  கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here