67 அடி உயர புத்தர் சிலை நயினாதீவில் நிறுவப்படும் உறுதிப்படுத்தினார் வடக்கு ஆளுநர் குரே!

0
378

9232கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதி கிடைக்கப்பெற்றதும் நயினாதீவில் 67 அடி உயர பிரமாண்டமான புத்தர் சிலை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்படும் என வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

ஆளுநர் அலுவலகத்தில் நேற்றையதினம் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் நயினைதீவு நாகவிகாரைக்கும் நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்துக்கும் இடைப்பட்ட இடப்பரப்பில் 67 அடி உயர மான புத்தர் சிலை ஒன்றை நிறுவுவதற்கான
நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதனால் கடல் வெளிப்பரப்பில் நாகபூசணி அம்மன் ஆலயம் மறைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளனவா என ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்குப்பதில் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
நான் அங்கு சென்று பார்த் தேன். விகாரை ஒருபக்கத்திலும் கோவில் ஒருபக்கமும் அமைந்துள்ளது. அமையவுள்ள சிலை ஒரு போதும் கோயிலை மறைக்காது.
கண்டியில் தலதாமாளிகை, கோயில், பள்ளிபோன்ற சமய ஸ்தலங்கள் அருகருகே எந்தபிரச்சினையும் இன்றி அமைந்துள்ளன.
அதேபோல நாகதீப பன்சாலை யிலும் யாழ்.நாகவிகாரையிலும் இந்துகடவுள்களின் சிலைகள் உள்ளன.
இந்த நிலையில் கோயிலை மறைத்து சிலை அமைக்க முயற்சி என்று வடக்கில் உள்ள ஊடகங்கள் செய்தியைவெளியிடுகின்றன.
சிலைவைப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என தெற்கு ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. ஊடகங்கள் சரியாகபுரிந்து கொள்ளாமல் செய்திகளை வெளியிடுகின்றன.
குறித்த சிலை நிறுவுவதற்கு கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதிகிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளகாரணத்தால்  குறித்தசிலை நிறுவும் பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. அவர்களின் அனுமதி கிடைத்தவுடன் சிலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக நயினாதீவு நாகவிகாரை விகாராதிபதி ஸ்ரீவிமலதேரர் கருத்துத் தெரிவிக்கையில்,
நாகதீப பிரதேசத்தில் சகலருடைய அனுமதியையும் பெற்றே இந்த வேலைத்திட்டத்தை ஆரம் பித்துள்ளோம். குறிப்பாக பிரதேச செயலர், வடமாகாண கடற்தொழில் சங்கங்கள் மற்றும் கடற்தொழில் அமைச்சின் அனுமதியினை பெற்றுள்ளோம். பௌத்த அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கடந்த டிசம்பர் மாதம் குறித்த சிலை அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டியிருந்தார்.
அதேபோன்று சுற்றுச் சூழல் பிரதி அமைச்சர் அனுர ஜெயலத் கடந்த சில தினங்களுக்கு முன்னர்  சிலை அமைப்பதற்கான பணிகளை தொடங்குங்கள் என தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதி கிடைக்காத காரணத்தால் அநாவசியமான பிரச்சினைகள் வருகின்றன என தெரிவித்தார்.
நயினாதீவு நாகவிகாரைக்கும் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கும் இடைப்பட்ட இடப்பரப்பில் 67 அடி உயரத்தில் புத்தர்சிலை அமைப்பதற்கான அனுமதிகளை பெறும் பொருட்டு உரிய விண்ணப்பங்கள் பிரதேச செயலக மட்டத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு யாழ் மாவட்டச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
கரையோர பாதுகாப்பு திணைக் களத்தின் அனுமதி பெற்றபின் னரே குறித்த வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவேண்டும். எனவே கரையோர பாதுகாப்புத் திணைக் கழத்தின் அனுமதியை பெற்றபின் னர்தான் சிலை அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க வேண்டும் என யாழ் மாவட்ட அரச அதிபரால் நாகதீப விகாராதி பதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தமிழ் மக்களின் வரலாற்று பிரசித்திபெற்ற இடமாகவும் இந்து சமயத்தின் தொன்மை யான வரலாற்றை கொண்டமைந்த பூமியாகவும் உள்ள நயினாதீவில் இவ்வாறான ஒரு பாரிய சிலை அமைக்கப்பட்டால் அது அடியோடு இந்து சமயத்தையும் தமிழ் மக்களின் வரலாறுகளையும் சிதைத்து விடும்.
இந்த கட்டுமானப்பணிகள் இன்னும் சில தினங்களுக்குள் தொடர உள்ளமையால் அனைவரும் இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். இதற்காக மக்கள் எதிர்ப்பொன்று அவசியம் என சுட்டிக்காட்டியுள்ள தமிழ் தரப் புக்கள், எதிர்ப்பு இல்லாவிட்டால் நயினாதீவு கோபுரத்தினை மறைக்கும் பிரமாண்டமான ஒரு புத்தர்சிலை கடலின் நடுவே தோற்றம் பெறுவதனை தடுக்க முடியாது போய்விடும் எனவும் கவலை தெரி வித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here