பிரான்ஸ் பாரிசில் ஊடகவியலாளர்கள் இனவெறி ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடித் தமது எதிர்ப்பை வெளிக்காட்டியதுடன், சம்பவத்தில் பலியானவர்களுக்கு தமது அஞ்சலிகளையும் தெரிவித்தனர்.
இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செய்யப்பட்டது.
அத்தோடு, தமது கண்டனத்தை வெளியிடும் பதாதைகள் கேலிச்சித்திரங்களையும் தமது கையில் தாங்கியிருந்தனர்.
இதேவேளை, இன்று வியாழக்கிழமை பிரான்சில் தேசிய துக்கதினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.