பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் நேற்று ஈஸ்டர் நாளை கொண்டாட நூற்றுக்கணக்கான கிறித்துவ மக்கள் குல்சான் இ இக்பால் என்ற பூங்காவில் திரண்டுள்ளனர்.
குழந்தைகள் பெற்றோர்கள் என அனைவரும் உற்சாகமாக திருநாளை கொண்டியவேளையில் திடீரென கூட்டத்தை சிதறடிக்கும் வகையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் இதுவரை குழந்தைகள் உள்பட 70 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 300க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள செய்தியில், தலிபான் தீவிரவாத அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற Jamaat-ul-Ahrar என்ற தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறியுள்ளது.
எனினும், இது குறித்து பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பூங்காவில் நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு அதிபர் மற்றும் பிரதமர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் அமைப்பு பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
அதில், ‘நாங்கள் லாகூர் நகரில் மீண்டும் காலடி எடுத்து வைத்துவிட்டோம் என்பதை உங்களுக்கு புரிய வைப்பதற்காக தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.