முல்லைத்தீவு கேப்பாப்பிலவு உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது!

0
167

protest-4தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் கடந்த மூன்று நாட்களாக மேற்கொண்டுவந்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.

கேப்பாப்பிலவு விநாயகர் ஆலய முன்றலில் நேற்று முன்தினம் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

கேப்பாப்பிலவு பகுதியில் இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

நிலங்களை விடுவிக்கக் கோரி பல முறைகள் போராட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும் இன்னும் நிலங்கள் விடுவிக்கப்படவில்லை என அவர்கள் கூறினர்.

உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்ட இடத்திற்கு இன்று மாலை சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா, மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் உண்ணாவிரதம் மேற்கொண்ட ஆறுமுகம் வேலாயுதப்பிள்ளையிடம் போராட்டத்தைக் கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இதன்போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உறுதிமொழியை மாகாண சபை உறுப்பினர் து.ரவிசகரன் வாசித்தார்.

பின்னர் அந்தக் கடிதத்தை உண்ணாவிரதம் மேற்கொண்டுவந்தவரிடம் கையளித்தார்.

இதனையடுத்து இந்த உண்ணாவிரதம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here