தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேப்பாப்புலவு விநாயகர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர், பிரதேச மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
கேப்பாப்புலவு பகுதியில் இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி பல முறைகள் போராட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும் இன்னும் நிலங்கள் விடுவிக்கப்படவில்லை என உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.