கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் பல இலட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதோடு கம்பு மற்றும் கற்களால் தாக்குதல் நடத்தியதாக தப்பி வந்த மீனவர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை கடற்படையினரின் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைக்கு அஞ்சி இன்று காலை ராமேஸ்வரத்திலிருந்து 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடி அனுமதி அட்டை பெற்று மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இன்று பகல் 12 மணியளவில் தனுஷ்கோடிக்கும் கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடிக்க முற்பட்ட போது அப்பகுதியில் விரைவு ரோந்துப் படகு மற்றும் அதிநவீன விரைவுப் படகுகளில்வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தை சேர்ந்த 100 க்கும் மேற்ப்பட்ட மீனவர்களை படகுகளுடன் சுற்றிவளைத்தனர் .
பின்னர் உருட்டுக்கட்டைகள், இரும்புக் கம்பிகள் மற்றும் கற்றகலால் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர் .
இதனால் அச்சம் அடைந்த மீனவர்கள் அவசர அவசரமாக பெரும் நஷ்டத்தோடு கரை திரும்பினர் மேலும் 20க்கும் மேற்ப்பட்ட படகுகளிலிருந்த மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி கருவிகளை சேதப்படுத்தி கடலில் வீசி எறிந்தனர்.
இனி இங்கு நின்றால் படகையும் உங்களையும் கைது செய்வோம் என மிரட்டியதோடு மூன்று படகுகளையும் விசாரணை என்ற பெயரில் நடுக்கடலில் நிறுத்தி வைத்தள்ளனர் .
இதில் சூசை அடைக்கலம் பாக்கியம் வின்ஸ்டன் உள்ளிட்ட 4 மீனவர்கள் தங்களது படகை மீட்டு கரை திரும்பினர் .
இந்நிலையில், இலங்கை கடற்படையிடமிருந்து தப்பி கரைதிரும்பிய மீனவர் சூசை கருத்துத் தெரிவிக்கையில்,
நம்ம எல்லையில் தனுஷ்கோடி கரை தெரியும் நிலையில் மீன்பிடிக்க ஆயத்தம் ஆகிவரும் நிலையில் திடீரென எங்கள் மீது கற்கள், இரும்பு கம்பிகள் மற்றும் போத்தல்களை வீசி தாக்குதல் நடத்தியதோடு கைது செய்வோம் எனவும் அச்சுறுத்தி விரட்டியடித்தனர் .
நாங்களும் உயிர் பிழைத்தால்போதும் என எண்ணி வேகமாக கரைக்கு திருப்ப முயற்ச்சித்த போது எங்களுடன் மூன்று படகுகைள பிடித்து ரோந்துபடகில் கட்டிவைத்தனர் .
பின் சக மீனவர்களை விரட்டியடித்தனர் . அப்போது அதிஷ்டவசமாக நாங்கள் உயிர்தப்பி கரைக்கு வந்து சேர்ந்தோம் .
எங்களுடன் இருந்த மீனவர்களும் படகின் நிலை ஏதும் தெரியவில்லை என கடற்படையினர் தங்கள் மீது எறிந்த கற்களை அச்சத்தோடு காண்பித்தனர் .
கடற்படையினரின் தாக்குதலால் 20 க்கும் மேற்ப்பட்ட படகுகளிலிருந்த பல இலட்சம் ரூபா மதிப்பிலான மீன்பிடி சாதனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் ரூபா 30 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டு கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர் .