பிரான்சில் தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தால் 5 ஆவது ஆண்டாக நடாத்தப்படும் இசைவேள்வி கர்நாடக சங்கீதப்போட்டி 19.03.2016 சனிக்கிழமை பொண்டி தமிழ்ச்சோலை மண்டபத்திலும் 20.03.2016 ஞாயிற்றுக்கிழமை 91270 vigneux sur seine பகுதிலும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வுகளில் மாவீரர் நினைவு ஈகைச்சுடரினை 12.07.2007 இல் மடுவில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வன்னியனின் சகோதரர்; மற்றும் மாவீரர் குடும்பத்தைச்சேர்ந்த உறுப்பினர் ஒருவரும் ஏற்றி வைத்தனர்.
அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து. நிகழ்வுகளுக்கான மங்கள விளக்கேற்றலினை தமிழர் கலைபண்பாட்டுக்கழக பொறுப்பாளர் திரு.சுதர்சன், துணைப்பொறுப்பாளர் திரு.கட்சன் செயலாளர் சிவபூபதி ஆகியோரும், இப்போட்டியின் நடுவர்களாக கலந்துகொண்ட திருமதி சந்திரகாசன் விமலாம்பிகை (இசைக்கலைமணி, இராமநாதன் நுண்கலைப் பீடம், யாழ்.பல்கலை,சங்கீத கலாவித்தகர், பண்ணிசைக் கலாவித்தகர்), திருமதி தர்மிகா முரளீதரன் ‘இசைஞானதிலகம்” (இராதாகிருஸ்ணன் அவர்களின் மாணவி) (நுண்கலைமாணி -இராமநாதன் கலைப்பீடம், கலாவித்தகர் – வட இலங்கை சங்கீத சபை), பாவனா பிரதியும்னா (இசை விடுசி – சித்திரவீணா ரவிகிரன் அவர்களின் மாணவி, முதுகலைமாணி – சென்னை பல்கலைக்கழகம், நிறுவுநர் – கர்நாடக சங்கீத இசைப்பள்ளி – பரிஸ்), ஆகியோர் உட்பட ஏனைய பலரும் ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.
ஆரம்ப நிகழ்வில் பங்குபற்றிய போட்டியாளர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் வரவேற்றுக்கொண்டதோடு, நடுவர்களை வரவேற்று தமிழர் கலைபண்பாட்டுக்கழக பொறுப்பாளர் போட்டி ஆவணங்களை அவர்களிடம் கையளித்து போட்டிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
போட்டிகள் முறையே வயலின், மிருதங்கம், குரலிசை தனி, குழு என நடைபெற்றன. அனைத்து போட்டிகளும் சிறப்பாக அமைந்திருந்தன. மாணவர்களும், அவர்களின் ஆசிரியர்களும் மிகவும் உற்சாகமாக போட்டிகளில் கலந்துகொண்டிருந்தனர். இம்முறையும் அனைத்துப்போட்டிகளும் பக்கவாத்தியங்கள் சகிதம் நடைபெற்றிருந்தன.
2015 இசைவேள்வியின் ‘இசைத்துளிர்” ஆகத் தெரிவுசெய்யப்பட்ட செல்வி தீபனி மதனராஜா சின்னத்துரை அவர்களின் சிறப்பு ஆற்றுகையும் இடம்பெற்றது.
சிறப்பு நிகழ்வாக நடுவராகக் கலந்துகொண்ட திரு.சுப்பிரமணியம் ஜெயராம் ( Ph .D (Management) சென்னையைச் சேர்ந்த திரு.ஓ.எஸ்.தியாகராஜன் அவர்களின் சங்கீத மாணவன்) அவர்களின் குரலிசை ஆற்றுகை இடம்பெற்றது.
நிகழ்வில் சிறப்புரையினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பரப்புரைப் பொறுப்பாளர் திரு. சத்தியதாசன் அவர்கள் வழங்கியிருந்தார்.அவர்தனது உரையில், புலம்பெயர் மண்ணில் எமது சிறார்கள் முன்னுதாரணமாகத் திகழவேண்டும் என்பதற்காகவே இவ்வாறான போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அதேநேரம் இவ்வாறான நிகழ்வுகளில் எமது தமிழ் மொழியிலான சங்கீத பாடல்களையும் இiணாத்துக்கொண்டால் நன்றாக இருக்கும்.
எமது தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஆனது இந்நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே செயற்பட்டுவருகின்றது. எமது செயற்பாடுகளைக் குழப்பும் முகமாக இன்றுகூட ஒருமைதானத்தில் நாசகார செயலில் சிலர் இறங்கியதாக அறியமுடிகின்றது. இதனை எமது உறவுகளே செய்துள்ளனர் எனும்போது மிகுந்த வேதனை அளிக்கின்றது. நாம் அனைவரும் இதனைத் தகர்த்து எமது சமூக விழுமியங்களைக் கட்டி எழுப்புவதில் அக்கறைசெலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் சார்பில் நன்றியுரைக்கப்பட்டது.
தொடர்ந்து நடுவர்கள் பிரான்சு தமிழர்கலை பண்பாட்டுக்கழகப்பொறுப்பாளர் திரு.சுதர்சன் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டனர்.
போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கான பரிசில்களையும், சான்றிதழ்களையும் மற்றும் பங்குபற்றிய போட்டியாளர்களுக்கான சான்றிதழ்களையும் போட்டியின் நடுவர்கள் மற்றும் உறுப்பினர்கள் வழங்கி மதிப்பளிப்புச் செய்திருந்தனர்.
போட்டியில் மிகச் சிறந்த போட்டியாளர் தெரிவுசெய்யப்பட்டு ‘இசைத்துளிர்” கிண்ணம் வழங்கப்பட்டது.
2016 இசைவேள்வியின் ‘இசைத்துளிர்” ஆக செல்வராஜா நிருஜன் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டு ‘இசைத்துளிர்” கிண்ணம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.
கிண்ணத்தைப் பெற்றுக்கொண்ட அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் பேசவார்த்தையின்றி; மேடையில் நின்றிருந்தார். அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியின் வெளிப்பாட்டைக் காட்டியிருந்தனர்.
நிகழ்வுகளின் நிறைவாக ‘நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” பாடலுடனும் ‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” எனும் தாரகமந்திரத்துடனும் 2016 இசைவேள்வி கர்நாடக சங்கீதப்போட்டி இனிதே நிறைவடைந்தது.
இசைவேள்வி 2016 போட்டி முடிவுகள்:
இசைத்துளிர் 2016
செல்வன் செல்வராஜா நிருஜன்
குரலிசை – கீழ்ப்பிரிவு
1ம் இடம்: ஜீவராஜா ப்ரத்யங்கிரா
2ம் இடம்: அமலியா சத்தியநாதன்
குரலிசை – மத்தியபிரிவு
1ம் இடம் : பக்திவேல் மாலதி
2ம் இடம் : சிவலோகநாதன் சுபாங்கி
3ம் இடம் : தெய்வேந்திரம் ஹரிஹரிணி
குரலிசை – மேற்பிரிவு
1ம் இடம் : சிவானந்தராஜா ராம்
2ம் இடம் : ஸ்ரீசுதேஸ்கரன் வருசினி
3ம் இடம் : ஸ்ரீதரன் ஆரபி
குரலிசை – அதிமேற்பிரிவு
1ம் இடம் : எட்வேட் லூயிஸ் அனோஜினி
2ம் இடம் : ஆரணி தர்மகுலசிங்கம்
3ம் இடம் : சுரேஸ் ஸ்ரெனிசியா
குரலிசை – அதிஅதிமேற்பிரிவு
1ம் இடம் : செல்வராஜா நிருஜன்
2ம் இடம் : கோகுலதாஸ் சூர்யா
3ம் இடம் : மயுந்தினி தவராஜன்
வயலின் – கீழ்ப் பிரிவு
1ம் இடம் : மகிந்தன் மிகிஷா
வயலின் – மத்திய பிரிவு
1ம் இடம் : அகிலன் ஆர்த்தி
2ம் இடம் : ராம்குமார் ராகரன்
3ம் இடம் : அகிலன் அஷ்வின்
வயலின் – மேற்பிரிவு
1ம் இடம் : மயில்வாகனம் அபிராமி
2ம் இடம் : தேவன் அசிதன்
3ம் இடம் : சிவானந்தராசா குந்தவி
வயலின் அதிமேற்பிரிவு
1ம் இடம் : பிரகாஷ் பகீரதன்
2ம் இடம் : தம்பிராஜா விதுஷா
3ம் இடம் : ஆரணி தர்மகுலசிங்கம்
வயலின் அதிஅதிமேற்பிரிவு
1ம் இடம் : செல்வக்குமரன் சிந்தியா
மிருதங்கம் – கீழ் பிரிவு (12 வயதின் கீழ்)
1ம் இடம் : கணபதிப்பிள்ளை கார்த்தி
மிருதங்கம் மத்தியபிரிவு (15 வயதின் கீழ்)
1ம் இடம் : புஸ்பகரன் அபினாஸ்
2ம் இடம் : சாள்ஸ் கெஸ்ரன் மெல்வின்
3ம் இடம் : ஆகாஷ் பகீரதன்
மிருதங்கம் மேற்பிரிவு (18 வயதின் கீழ்)
1ம் இடம் : சிற்சபேசன் ஆகாஷ்
2ம் இடம் : முகுந்தகுமார் மிதுலன்
3ம் இடம் : பாலச்சந்தரன் தசிகரன்
மிருதங்கம் (18 வயதின் மேல்)
1ம் இடம் : மார்க்கண்டு ஜெனோர்டன்
2ம் இடம் : நேரியூஸ் அலன்
3ம் இடம் : நித்தியானந்தன் விஸ்ணுகரன்
வயலின் (குழு) கீழ்ப்பிரிவு
1ம் இடம் : அம்பாள் இசைப்பள்ளி
2ம் இடம்; : சோதியா கலைக்கல்லூரி
வயலின் (குழு) மேற்பிரிவு
1ம் இடம் : சோதியா கலைக்கல்லூரி
2ம் இடம்; : இல.5 அம்பாள் இசைப்பள்ளி
3ம் இடம் : இல.4 அம்பாள் இசைப்பள்ளி
குரலிசை (குழு) கீழ்ப்பிரிவு
1ம் இடம் : இல.1 இசைக்கதம்பம்
2ம் இடம்; : சோதியா கலைக்கல்லூரி
3ம் இடம் : இல.3 இசைக்கதம்பம்
குரலிசை (குழு) மேற்பிரிவு
1ம் இடம் : இசைக்கதம்பம்
2ம் இடம்; : இவ்ரி சூசென்
3ம் இடம் : தொர்சி
ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு