
இச் சம்பவம் நேற்று இரவு 8 மணியள வில் முல்லைத்தீவு மாங்குளம் பிரதான வீதி, 3ஆம் கட்டை வளைவுப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதில் முள்ளியவளை கேப்பா பிளவினை சேர்ந்த செல்லத்துரை விஜயகுமார் (வயது 26) என்ற கடற்தொழிலாளியே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
சடலமானது பிரேத பரிசோதனைக்காக மாஞ்சோலை மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.