பெல்ஜியம் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து பிரான்சின் தலைநகர் பாரிசிலும் உச்ச பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
விண்ணுந்து நிலையங்கள், தொடருந்து நிலையங்கள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
பாரிசு கார் து நோர் தொடருந்து நிலையம் திடீரென சுற்றிவளைக்கப்பட்டு குண்டு செயலிழக்கும் படையினர் வரவழைக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் தேவையற்ற விதத்தில் ஒன்றுகூடுவதும் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பாரிசில் கடும் பதற்ற நிலை காணப்படுகின்றது.
பொதுமக்கள் அவசர அவசரமாக வீடுகளுக்கு செல்வதையும் காணமுடிந்தது.
தமிழ் மக்களின் வர்த்தக நிலையங்கள் ஆலயங்கள் கார்து நோர் தொடருந்து நிலையத்திற்கு அருகில் இருப்பதனால் தமிழ் மக்களும் பெரும் பதற்ற நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.