Maalbeek, Schuman என்ற தொடருந்து நிலையங்களில் அடுத்தடுத்து வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இந்த தாக்குதலில் 10 பேர் வரை உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடந்த இந்த தொடருந்து நிலையங்களின் அருகில் ஐரோப்பிய ஆணையத்திற்கு சொந்தமான சில அலுவலகங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், தலைநகரில் உள்ள அனைத்து தொடருந்து நிலையங்களும் மூடப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்ததாக்குதல்களை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த பெல்ஜியம் உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.