நண்பர்களுடன் குளித்த இளைஞன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மரணம்!

0
152
bodyகிளிநொச்சி கோரைமோட்டை ஆற்றுப் பகுதியில் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் தவறி நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
புனரமைப்பு பணிகளுக்காக நீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதியில் குளிப்பதற்காக  சக நண்பர்களுடன் மலையாள புரம் பகுதியைச்சேர்ந்த பிரஸ்தாப இளைஞன் சென்றுள்ளார்.
குளித்துக்கொண்டிருந்த வேளை குறித்த இளைஞன் நீரினால் அடித்து செல் லப்பட்டதாகவும், அதன் பின் னர் குறித்த இளைஞனை தேடும் நடவடிக்கை இடம்பெற்ற போதி லும் குறித்த இளைஞன் சடலமா கவே மீட்கப்பட்டதாக கூறப்படு கிறது.
இளைஞரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல் லப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 20 வயதான ஸ்டான்லி எனும் இளை ஞன் என குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை குறித்த பகுதி ஆழம் குறைந்த பகுதி எனவும் பி.ப. 3.00 மணிக்கு காணாமல் போன இளைஞன் பி.ப. 5.00 மணி யளவில் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் கிளி நொச்சி பொலிஸார் விசாரணை  களை மேற்கொண்டு வருகின்ற னர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here