ஆப்பிள் ஐபோன் எஸ்.இ. வெளியிடப்பட்டது – முழு தொழில்நுட்ப விபரங்கள்!

0
174

apple-iphone-6SEகலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் புதிய ஐபோன் எஸ்.இ. ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. விழாவை ஆப்பிள் சி.இ.ஓ. டிம் குக் தொடங்கிவைத்து பேசினார். ஆப்பிள் நிறுவனத்திற்கும், அமெரிக்க அரசுக்கும் நடந்துவரும் சட்ட போராட்டங்கள் பற்றி டிம் குக் பேசினார். பின்னர் புதிய ஐபோன் எஸ்.இ. வெளியிடப்பட்டது.

ஐபோன் எஸ்.இ.-ன்  முக்கிய அம்சங்கள்:

64-பிட் ஆப்பிள் ஏ9 செயலி, 4 இன்ச் திரையுடன் 4k வீடியோ ரெக்கார்டிங்,1 ஜி.பி. ரேம், 12 மெகா பிக்சல் கேமரா, Hey Siri, லைவ் போட்டோ, 16 ஜி.பி. மற்றும் 32 ஜி.பி. சேமிப்பு ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.

மேலும் புளூடூத் (4.2), மேம்படுத்தப்பட்ட வை-பை, புதிய மைக்ரோ போன், பிங்கர் பிரிண்ட் சென்ஸாருடன் கூடிய ஆப்பிள் பே ஆகிய முக்கிய அம்சங்கள் உள்ளன. 16 ஜி.பி. போனின் விலை 399 டாலராகவும், 32 ஜி.பி. போனின் விலை 499 டாலராகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏப்ரல் மாதம் முதல் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஐபோன் எஸ்.இ. போனானது ஐபோன் 6எஸ் போனை முன்மாதிரியாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐபோன் எஸ்.இ. போன் மார்ச் 31-ம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது. மற்ற நாடுகளில் மே மாதம் முதல் விற்பனைக்கு வரும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here