நாட்டில் இடம்பெற்ற இறுதிப் போர் தொடர்பான விசாரணைகளை அடுத்து நடத்தப்படும் உள்நாட்டு நீதிச் செயல்முறைகளில், வெளி நாட்டு நீதிபதிகளை உள்ளடக்கு வதற்குத் தான் இணங்கப் போவ தில்லை என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன மீண்டும் தெரிவித்து ள்ளார்.
வாதுவவில் நேற்றுமுன்தினம் நடந்த சட்ட கருத்தரங்கில் உரை யாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நான் உள்நாட்டு நீதித்துறை மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். நீதித் துறையை வலுப்படுத்த தேவை யான அனைத்தையும் செய்ய வேண்டும் என்றும், அதன் சுதந் திரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உணர்கிறேன்.
போருடன் தொடர்புடைய மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நடத்தப்படும் உள்நாட்டு விசாரணை களின் நம்பகத்தன்மையை உறுதிப் படுத்துவதற்கு வெளிநாட்டு நீதிபதி களை அழைக்க வேண்டும் என்று அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் அழைப்பு விடுத்துள் ளன.
மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையின் பின்னர், நீதித்துறைச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை இருந்தால், வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கைக்கு வருமாறு அழைப் பதற்கோ அல்லது அவர்கள் இதில் தலையீடு செய்வதற்கோ இணங்க மாட்டேன்.
உள்நாட்டு நீதித்துறை எந்த அரசியல் தலையீடுகளும் இன்றி சுதந்திரமாகச் செயற்படுவதற்கு எனது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் ஜனாதிபதி தெரி வித்துள்ளார்.