வித்தியா படுகொலை வழக்கில் கண்கண்ட சாட்சி உண்டு நீதிமன்றில் சி.ஐ.டி பரபரப்புத் தகவல்!

0
187

vithபுங்குடுதீவு மாணவி கூட்டுவன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்படும் போது, அதனை நேரில் கண்ட கண்கண்ட சாட்சியம் இருப்பதாக குற்றப்புலனாய்வு துறை பரபரப்பு தகவல் ஒன்றினை நீதிமன்றில் தெரிவித்துள்ளது. இந்த சாட்சியம் தொடர்பில் தாம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சி.ஐ.டி. கூறியுள்ளது.

புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்வின் பின்னர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் ஊர்காவற்துறை நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம் ரியால் முன்னிலையில் நடைபெற்று வருகின்றது. இது தொடர்பான வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சி.ஐ.டியினர் மேற்படி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர்.

நேற்றைய தினம் சந்தேக நபர்கள் தரப்பில் ஆயராகியிருந்த சட்டத்தரணிகள் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குமாறு மன்றில் பிணை விண்ணப்பம் செய்தனர், எனினும் கொலைச்சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சி.ஐ.டி. பிணை வழங்க வேண்டாம் எனவும் மன்றில் மறுப்பு தெரிவித்தனர்.

மேலும் குறித்த சந்தேக நபர்களது தொலைபேசி பதிவுகள் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றதாகவும், கொலையை நேரில் பார்த்த கண்கண்ட சாட்சி ஒருவர் உள்ளதாவும் தெரிவித்த சி.ஐ.டி., அது தொடபில் தாம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களது சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகளின் பிணை விண்ணப்பத்தை நிரகாரித்த நீதவான், எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் வழக்கு யாழ்.நீதிமன்றில் பாரப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.  பிணை விண்ணப்பத்தை யாழ்.மேல் நீதிமன்றில் மேற்கொள்ள முடியும் எனவும் நீதவான் கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற வழக்கின் போது வித்தியா சார்பில் எந்தவொரு சட்டத்தரணியும் ஆயராகாத நிலையில், சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணிகளான ஜோய் மகிழ் மகாதேவா, சரத் வல்கமுவ, அசேலடி சில்வா ஆகியோர் ஆயராகி இருந்தனர். வழக்கு மீண்டும் இருபத்தி எட்டாம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here