யாழ் போதனா வைத்தியசாலை தாதியர்கள் போராட்டம்!

0
439
strieeeயாழ் போதனா வைத்தியசாலை தாதியர்கள் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இவர்கள் இன்று முதல் மாலை வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ். போதனா வைத்தியசாலையில்  கடமையாற்றுகின்ற தாதியர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைக்கு என அழைத்து சென்று கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரச தாதியர் உத்தியோகத்தர்கள் சங்கத்தினரும் அனைத்து ஊழியர் சங்கத்தினரும் இணைந்து இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘வைத்தியசாலை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய், குற்றவாளியை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தும் வரை போராட்டம் தொடரும்இ தாதியத்தை கொலை செய்யாதே அது உயிரை காக்கும் தொழிலாகும்’ போன்ற வாசகஙகள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை போராட்டம் தொடர்பாக அரச தாதியர் உத்தியோகத்தர் சங்க தலைவர் நற்குனராஜா கருத்து தெரிவிக்கையில்,
கடந்த இரு நாட்களுக்கு முன்னர் பார்வையாளர் நேரம் முடிந்ததன் பின்னர் உறவினர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை பார்க்க சென்றுள்ளார்.
இதன்போது அங்கு கடமையாற்றிக் கொண்டிருந்த ஆண் தாதியர் ஒருவர் குறித்த உறவினரிடம் உங்களது நேரம் முடிந்து விட்டது ஆகவே நீங்கள் சென்றுவிட்டு மாலை வந்து பார்க்குமாறு கூறியுள்ளார்.
இந்நிலையில் தாதியர் பேச்சை குறித்த நபர் கவனத்தில் எடுக்காமையை தொடர்ந்து இருவருக்குமிடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவத்தையடுத்து நோயாளரை பார்வையிட வந்த நபரால் யாழ். பொலிஸ் நிலையத்தில் தாதியர் தன்னை மிரட்டியதாகவும் தன்னை தாக்கியதாகவும் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து குறித்த தாதியரை பொலிஸார் விசாரணை செய்து வந்த நிலையில்  நேற்றைய தினம் விசாரணைக்கு என வைத்தியசாலை நிர்வாகத்திடம் கூறி அழைத்து சென்று அதன் பின்னர் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
இதன் பின்னர் குறித்த தாதியர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும்  அவர் தெரிவித்தார். அத்துடன் குறித்த செயலானது தவறானதானது எனவும் உண்மையான குற்றவாளியை விடுத்து தவறு செய்யாதவரை பொலஸார் கைது செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here