மாற்றங்கள் பல ஏற்பட்டிருந்தாலும் இராணுவம் இருப்பது பிரச்சினையே:அவுஸ். தூதுவரிடம் விக்னேஸ்வரன்!

0
153
9425மாற்றங்கள் பல ஏற்பட்டிருந்தாலும், தொடர்ந்தும் இராணுவம் வடக்கில் இருப்பது, எமக்கு பிரச்சினையாக இருக்கின்றது என அவுஸ்திரேலிய தூதுவரிடம் தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர், வடக்கிற்கு உதவி செய்யும் வெளிநாடுகள் மத்திய அரசின் ஆலோசனையில் மட்டும் செயற்படாமல் வடக்கின் மக்கள் பிரதிநிதிகளிடம் ஆலோசித்து உதவிகளை வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் பீறீன் ஹஸ்சன் நேற்றைய தினம் காலை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது வாசல்தலத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன் போதே வடக்கு மாகாண முதலமைச்சரால் மேற்படி விடயங்கள் தூதுவரிடம் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பில் முதலமைச்சர் மேலும் கூறுகையில்;,
வடக்கு மக்களுக்கு அவுஸ்திரேலியா மூலம் என்னென்ன உதவிகள் வழங்க முடியும் என்பதனை பரிசீலிக்கதான் அவர் இங்கு வந்திருந்தார். மத்திய அரசும் அவுஸ்திரே லிய அரசாங்கமும் இணைந்து நடவடிக்கை எடுப்பதனை நாங்கள் காண்கின்றோம். அதிலே மாகாண அரசிற்கு இருக்கும் பங்கு குறைவாக தான் இருக்கின்றது.
எங்கள் மக்களுக்காக உதவிகள் செய்யப்படும் போது அந்த மக்களுடைய பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிந்து தான் செயற்படுவது நல்லது என கூறினேன். மக்களு டைய பிரதிநிதிகளை புறக்கணித்து மத்திய அரசின் சொற்படி நடப்பது சரியாக இருக்காது என்றும் எங்களுடன் கலந்தாலோசிக்குமாறும் கூறியிருந்தேன் .
பலவிதங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், தொடர்ந்தும் இராணுவம் இருப்பது எமக்கு பிரச்சினையாக உள்ளது. நேற்றைய தினம் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி என்னை சிநேகிதபூர்வமாக சந்தித்திருந்தார்.
எனினும் இராணுவம் எங்களுக்கு நன்மை செய்வதாக கூறி எது செய்தாலும், தொடர்ந்து இராணுவம் வடக்கில் இருப்பதை எமது மக் களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது.
யுத்தம் முடிவடைந்து ஆறுவருடங்கள் ஆகிவிட்டன, ஆகவே படிப்படியாக இராணுவ பிரசன்னத்தை குறைப்பது தான் நல்லது என குறிப்பிட்டேன். மத்திய அரசுடனான உறவில், மாகாண சபைகளை புறக்கணித்து மத்திய அரசு செயற்படுவது எமக்கு வருத்தத்தை தரு வதாக கூறினேன். மாகாணசபை என்று சில அதிகாரங்களை கொடுத்துவிட்டு,
அதிகாரங்களை பகிர்கின்றோம் என கூறிக் கொண்டு எம்மை கேட்காமல் செயற் படுவது ஏற்றுக்கொள்ள கூடியதல்ல, இதனை அவர் கருத்தில் எடுப்பதாக கூறினார். ஆங்கில மொழி மிகவும் அவசியமானது என குறிப்பி டப்பட்டது. பிரிட்டிஷ் கவுன்சில் எமக்கு உதவி வருவதனை கூறினேன். எமது அலுவலர்க ளுக்கு போதிய ஆங்கில அறிவை வழங்கு வது தொடர்பில் தமது நாடு உதவுவதாக குறிப்பிட்டார்.
இறுதியாக எனது கருத்துக்களை ஏற்றுக் கொண்ட தூதுவர், எங்கள் இடங்களில் மேற் கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் எங்களுடன் கலந்துரையாடி நட வடிக்கைகள் எடுப்பதற்கு விரும்புவதாக  குறிப்பிட்டு சென்றார்.
மேலும் வடக்கிற்கு அவுஸ்திரேலிய அரசு தொடர்ந்தும் உதவி வழங்கும் எனவும் அவர் கூறினார் என முதலமைச்சர்  குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here