கல்லூரிகளின் கௌரவத்தை கெடுக்கும் ரவுடிக்கும்பல்களை உடன் கைது செய்யுங்கள்: மா.இளஞ்செழியன்

0
572

jaffna-courtகல்லூரிகளின் கௌரவத்தை கெடுக்கும் ரவுடிக்கும்பல்களை உடனடியாக கைது செய்வதுடன் அவர்களுக்கு அடைக்கலம் வழங்கிய குற்றத்தின் பேரில் அவர்களின் பெற்றோர்களையும் நண்பர்களையும் கைது செய்யுமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நேற்றையதினம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் தட்டாதெருச்சந்தி கே.கே.எஸ். வீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை
பட்டப்பகலில் 10, 15பேர் மோட்டார் சைக்கிள்களில் வலம் வந்து தெரு ரவுடித் தனத்தில் ஈடுபட்டு, வாள்வெட்டு நடத்தியிருந்த சம்பவத்தையடுத்தே ஒருவார காலத்திற்குள் கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் தலைமைப் பொறுப்பை புதிதாக ஏற்றுள்ள இன்ஸ்பெக்டர் வீரசிங்கவிற்கு பணித்துள்ளார்.

பொலிசாருக்கு வழங்கியுள்ள பணிப்புரையில் நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்திருப்பதாவது
நேற்று (ஞாயிறன்று) யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் பட்டப்பகலில் 10,15 பேர் மோட்டார் சைக்கிளில் வலம் வந்து வாள் வெட்டுக்களில் ஈடுபட்டதாகவும் இதனால் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவருகின்ற பத்திரிகைகளில் செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

பத்திரிகைகளில் வரும் செய்திகளை, பொலிசாருக்குக் கொடுக்கப்படுகின்;ற தகவல்களாக கருதி பொலிசார் உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டும். சம்பவங்கள் குறித்து பொலிசாருக்கு முறைப்பாடுகள் எதுவும் வரவில்லை என அலட்சியமாக இருக்கக் கூடாது. யாழ்ப்பாணத்தில் 75 வீதம் குற்றச் செயல்கள் கட்;டுப்பாட்டில் உள்ளபோது 25 வீதமான இத்தகைய ரவுடித் தனங்கள் இன்றும் காணப்படுவதை அனுமதிக்க முடியாது.

இடத்தில் இருந்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் மற்றும் நீதிமன்றங்கள் என்பன கால் கிலோமீற்றர் தொலைவில் ,அமைந்துள்ள ஒரு இடச் சூழலிலேயே, கேகேஎஸ் வீதியில் தெரு ரவுடித்தனம் மற்றும் வாள் வெட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆயினும் அந்தரவுடிக் கும்பல்களை உடனடியாக சட்டத்தினால் அடக்க முடியாமல் போயுள்ளதே என்பதை எண்ணும்போது வெட்கமாக உள்ளது.

இந்தச் சம்பவமானது, தெருரவுடித்தனம் மற்றும் வாள் வெட்டுச் சம்பவங்களில் எவரும் ஈடுபடக்கூடாது என நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவுக்கும் நீதிபதிகளுக்கும் பொலிஸாருக்கும் சவால் விடும் சம்பவங்களாக நோக்க வேண்டியுள்ளது. ஆயினும் நீதிமன்றம் சற்று தாமதமாகவே குற்றம் புரிபவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் என்பதை பொலிசார் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற பொலிஸ் நிலையம் மற்றும் நீதிமன்றங்கள் அமைந்துள்ள ஒரு சூழலில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் காட்டுமிராண்டித்தனமாக ரவுடித்தனத்தில் ஈடுபட்ட அந்த 15 பேரையும் உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்

இந்தச் சம்பவத்தில் காயமடைந்துள்ளவரிடம் இருந்து ரவுடித்தனத்தில் ஈடுபட்டவர்கள் பற்றிய தகவல்களைப் பெற்று சந்தேக நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்படுகின்ற நபர்களிடம் மற்றும் அவர்களது பெற்றோர்களிடத்தில் மேல் விசாரணைகள் நடத்தி தெருரவுடித்தனத்தினலும் வாள்வெட்டுச் சம்பங்களிலும் ஈடுபடுபவர்கள் அனைவரையும் கைது செய்யவேண்டும்.

யாழ்ப்பாணத்தில் பிரபல்யமான கல்லூரிகளில் இருந்து ரவுடிகள் உருவாகுவது வெட்கக்கேடான விடயம். இந்துக் கல்லூரி மிகவும் பிரபலமானது. யாழ்ப்பாணத்தின் கல்விக் களஞ்சியமாகிய அது சமூகத்தில் உச்சநிலையிலான புத்தி ஜீவிகளை படைத்து வருகின்ற ஒருகல்விச் சாலையாகும். கல்லூரியின் பெயரையும்,அதன் கௌரவத்தையும் கெடுக்கும் வகையில் சிலமாணவர் குழுக்களும், சில பழையமாணவர் குழுக்களும் இத்தகைய தெருரவடித்தனம் மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றர்கள்.

அண்மையில் இந்துக் கல்லூரி அதிபருடைய வீட்டுக்கு இரவு 3 மணிக்குச் சென்று தாக்குதல் நடத்தியிருக்கின்றார்கள். இந்தச் சம்பவம் தொடர்பில், இந்துக் கல்லூரி அதிபருடன் கலந்துரையாடல் நடத்தி அவர்களிடம் விபரங்களை பெற்று அந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடிகளைக் கைது செய்யவேண்டும்.

இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களின் பெற்றோர்களை விசாரணைக்கு உட்படுத்தி, அந்த சந்தேக நபர்களுக்கு உணவு உடை வசதிகள் கொடுத்திருக்கின்றார்களா எனகண்டறிந்து, குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டில் அந்தப் பெற்றோரைக் கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தவேண்டும்.

பொலிஸ் நிலையத்திற்குள்ளேயே பொலிசார் இருக்க வேண்டாம். அனைவரும் வீதிக்கு இறங்குங்கள். வீதிகளில் சைக்கிள் ரோந்து நடவடிக்கைகளை ஆரம்பித்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்காணித்து குற்றச் செயல்களை உடனுக்குடன் கட்டுப்படுத்த வேண்டும்.

வீதிகளில் வேலையற்று வீணே 5 பேருக்கு மேலாககூட்டமாக நிற்கும் இளைஞர்களைக் கைது செய்து, அவர்களுடைய பெற்றோரை பொலிஸ் நிலையத்;திற்கு அழைத்து எச்சரிக்கை செய்து அவர்களிடம் கையளியுங்கள்.

பொது மக்களை அச்சுறுத்தும் மாணவர் குழுக்களுக்கு மேல் நீதிமன்றத்த்ல் பிணை கிடையாது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக போதைவஸ்து குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மேல் நீதிமன்றம் பிணை வழங்கவில்லை.

பொலிசார் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே, நீதிமன்றம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. எனவே பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு நீதிமன்று துணையாக நிற்கும். குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற மாணவர்கள், பழையமாணவர் குழுக்களையும், அவர்களின் நண்பர்களையும் உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here