மாரடைப்பால் உயிரிழந்த மூத்த ஊடகவியலாளரும் தமிழ்த் தேசியவாதியுமான ந.நவரட்ணராஜாவின் இறுதிக் கிரியைகள் இன்று மல்லாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
கடந்த 8 ஆம் திகதி உயிழந்த இவரது பூதவுடல் இன்று காலை வரை அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இதன்போது ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், கல்வி அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், விளையாட்டு அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்தோரும் அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை இடம்பெற்ற இறுதிக் கிரியைகளைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், துறைசார்ந்த அதிகாரிகள் அஞ்சலி உரைகளை ஆற்றினர். தொடர்ந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட இவரது புகழுடல் மல்லாகம் இந்து மயானத்தில் எரியூட்டப்பட்டது.