எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலங்கள்: புதிரான பல தகவல்கள் வெளியீடு!

0
195

DANKOTUWAதங்கொட்டுவ புத்கம்பொல பகுதியில் பாளடைந்த வீதியொன்றில் எரிந்த நிலையிலிருந்த வேன் ஒன்றிற்குள் இருந்து 5 சடலங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் புதிரான பல சந்தேகங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

குற்றுயிருடன் எரிக்கப்பட்டிருக்கலாம்

119 பொலிஸ் அவசர அழைப்பு பிரிவினருக்கு இன்று காலை கிடைத்த தகவல்களுக்கு அமைவாகவே சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் குற்றுயிருடன் அல்லது கொலை செய்யப்பட்டு வேனுக்குள் வைத்து எரிக்கப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அதிகாலை 1.30 க்கும் 5.00 இடைப்பட்ட நேரத்தில் 

இந்த சம்பவமானது ஆள் நடமாற்றமற்ற குறித்த பாழடைந்த வீதியில் இன்று அதிகாலை 1.30 க்கும் 5.00 இடைப்பட்ட நேரத்தில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வேனின் இலக்கத்தகடு மீட்பு

குற்றம் இடம்பெற்ற இடத்தில் ஏரிந்த நிலையில் இருந்த வேனுக்கு அருகில் இருந்து வேனின் இலக்கத்தகடும் செருப்புக்கள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளதுடன் வேனில் பயணித்த குறித்த பாலடைந்த வீதியில் பல இடங்களில் இரத்த கரையையும் பொலிஸார் அவதானித்துள்ளனர்.

இதன் அடிப்படையிலேயே இதனை கொலை என சந்தேகிக்கும் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரனையை ஆரம்பித்துள்ளனர்.

பால் நிலையை காண முடியவில்லை

வேனுக்குள் ஏரிந்த நிலையலிருந்த சடலங்கள் பால்நிலை வேறுபாட்டை கூட அறிமுடியாதளவுக்கு தீயினால் கருகியுள்ளதாகவும் அதனால் உயிரிழந்துள்ளவர்கள் யார் என இன்று மலை வரை அடையாளம் காணப்படவில்லையெனவும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடக பேச்சாளர் சட்டதரணி ருவான் குணசேகர  தெரிவித்தார்.

சடலங்கள் நீர்கொழும்பிற்கு கொண்டுச் செல்லப்பட்டன

சம்பவ இடத்திற்கு இன்று பிற்பகல் மாரவில மேலதிக நீதவான் ஹசன் சமரசிங்க நேரில் சென்று ஆராய்ந்ததுடன் நீர்கொழும்பு சட்டவைத்திய அதிகாரியும் ஸ்தலத்திற்கு சென்றார். இந்நிலையில் கருகிய ஐந்து சடலங்களும் நீதிவான் உத்தரவுக்கு அமைய நீர்கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரியின் பொறுப்பில் நீர்கொழும்பிற்கு எடுத்துச் செல்லப்பட்டது

இதனிடையே இன்று மாலை பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் பல சந்தேகத்திற்கிடமான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

வேன் கலுத்தோட்ட பினான்ஸ் நிறுவனத்தினுடையது

எரிந்த நிலையில் காணப்பட்ட வேன் கலுத்தோட்ட பினான்ஸ் நிறுவனத்தினால் பயன்படுத்தப்பட்டது எனவும் பன்னல பகுதியினை சேர்ந்த ஒருவர் வாகனத்தின் சாரதியாக செயற்பட்டு வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சாரதியை காணவில்லை

கபில எனப்படும் குறித்த சாரதி கடந்த 10 ஆம் திகதி இரவு 11.00 மணியளவில் தனது மனைவிக்கு தொலைபேசி அழைப்பை எடுத்துள்ளதாகவும் தனது நண்பர்களுடன் பயணம் ஒன்று செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். அன்றிலிருந்து தற்போது வரை அவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லையென சாரதியின் மனைவி பொலிஸில் முறைபாடு செய்துள்ளார்.

குற்றச்செயல்கள் 

கபிலவுக்கு எதிராக சில குற்றச்செயல்கள் தொடர்பில் சில முறைபாடுகள் இருப்பதாக தெரிவிக்கும் பொலிஸார் ஏரிந்த நிலையிலிருக்கும் சடலங்களில் அவரின் சடலமும் உள்ளதா என்பதனை தற்போதைக்கு உறுதிப்படுத்த முடியாது என்றனர்.

கொழும்பில் காணாமல் போன நபரா?

இதனிடையே கொள்ளுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கடந்த 10 ஆம் திகதி காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு முறைபாடு கிடைத்துள்ளது. குறித்த குற்றமானது இரண்டு பாதாள உலக குழுக்கள் மத்தியில் இடம்பெற்ற மோதலின் பிரதிபலனாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஆமி சம்பத்தின் குடும்பமா?

அத்துடன் கொழும்பு வடக்கை மையப்படுத்திய பிரபல பாதாள  உலக குழுவின் தலைவர்களின் ஒருவரான ஆமி சம்பத் மற்றும் அவரது குடும்பத்தினர் இவ்வாறு பகைவரான பாதாள குழுவொன்றினால் ஏரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆமி சம்பத் மற்றும் அவரின் குடும்பத்தினர் இருக்கும் இடம் தொடர்பில் தற்போதைக்கு எந்த தகவல்களும் இல்லாத நிலையிலேயே இந்த சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சிறுபிள்ளையின் சடலமும் மீட்பு

ஏரியுண்ட சடலங்களில் சிறுபிள்ளை ஒன்றின் சடலமும் உள்ளதாக கூறப்படும் நிலையிலேயே ஆமி சம்பத் குறித்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. கடந்த வாரம் மாளிகாவத்தை பகுதியில் சிறைச்சாலை பஸ் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி அதிலிருந்த பிரபல பாதாள குழு தலைவர்களில் ஒருவரான தெமட்டகொட சமிந்தவை கொலை செய்ய முயன்றமை தொடர்பில் ஆமி சம்பத் புளுமெண்டல் சங்க உள்ளிட்ட பாதாள உலக குழு மீது சந்தேகம் நிலவுகின்றது.

பாதாள உலக கோஷ்டியின் பழிவாங்கலா?

அதற்கு பழி தீர்க்கும் வகையில் ஆமி சம்பத் குடும்பத்துடன் கடத்தப்பட்டு இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் விசாரணையாளர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும் இன்று மாலை வரை இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர்கள் தொடர்பிலோ அல்லது சந்தேக நபர்கள் தொடர்பிலோ எவ்வித உத்தியோக பூர்வ  தகவல்களும் வெளியிடப்படவில்லை.

தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்தின் மூன்று சிறப்பு குழுவுக்கு மேலதிகமாக பாதாள உலக குழுக்களை ஒடுக்க சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் கீழ் உருவாக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கை குழுவும் உளவு பிரிவும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த வேன் ஆள் நடமாட்டமற்ற பாலடைந்த பகுதிக்கு ஏன் சென்றது, அதில் பயணித்தவர்கள் யார், அதனை பின் தொடர்ந்து எவரும் சென்றனரா சம்பவத்தை எவரும் அறிந்துள்ளனரா என்பது தொடர்பில் பொலிஸார் அவதானம் செலுத்தியுள்ளனர்.

*குற்றுயிருடன் எரிக்கப்பட்டு இருக்கலாம்

*வேன் பினான்ஸ் நிறுவமொன்றுக்கு சொந்தமானது

*பால் நிலை அடையாளம் காணமுடியாத அளவிற்கு சடலங்கள் கருகியுள்ளன.

*எரியுண்டது ஆமி சம்பத்தின் குடும்பமா?

*சிறுபிள்ளை ஒன்றின் சடலமும் மீட்பு

*கொழும்பில் காணாமல் போன நபர் எரிக்கப்பட்டாரா?

*வேன் சாரதியும் உயிரிழந்திருக்கலாமா

*பாதாள உலக கோஷ்டியின் பழிவாங்கலா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here