மத்திய அரசால் கொண்டுவரவுள்ள தகவலறியும் சட்ட மூலத்திற்கு வடக்கு மாகாண சபை திருத்தங்க ளுடன் ஒப்புதல் வழங்கியுள்ளது. எனினும் மாகாண சபையின் திருத்தங்கள் மேற்படி சட்ட மூலத்திற்குள் உள்வாங்காத பட்சத்தில் வடக்கு மாகாண சபை தனது ஒப்புதலை வழங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசால் கொண்டுவரவுள்ள தகவலறியும் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக நாட்டில் உள்ள ஒன்பது மாகாணங்களின் ஒப்புதல்களும் பெறப்பட்ட பின்னரே குறித்த சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் என்பது நியதி, இந்த நிலையில் ஏனைய மாகாண சபைகள் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில்,
வடக்கு மாகாண சபை இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை. இந்நிலையிலேயே மேற்படி சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பான விடயம் நேற்றையதினம் கைதடி பேரவை செயலகத்தில் நடைபெற்ற மாதாந்த அமர்வில் விவாதிக்கப் பட்டது.
இதன் போது குறித்த சட்ட மூலத்தில் முதலமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் வாசிக்கப்பட்டன.
வடமாகாண முதலமைச்சரால் செய்யப்பட்ட திருத்தங்கள் மற்றும் உறுப்பினர்கள் சிலரின் தீர்மானங் களுடன் இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அனுப்பவுள்ளோம்.
இதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்கின்றதா? என அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உறுப்பினர்களைப் பார்த்துக் கேட்டார். இதையடுத்து, எவரும் ஆட் சேபனை தெரிவிக்காத நிலையில், சட்டமூலத்தை ஏற்றுக்கொள்வதாக அவைத்தலைவர் அறிவித்தார்.
எனினும் மேற்படி சட்ட மூலத் தில் வடக்கு மாகாண சபையால் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப் படாவிட்டால் அதற்கு வடக்கு மாகாண சபை ஒப்புதல் வழங்க கூடாது என பெரும்பாலான உறுப்பினர்கள் கூற, அதனையும் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் ஏற்றுக்கொண்டார்.