லண்டனில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் ஈழத்து பெண் மரணம்!

0
190

londonஇன்று(11) காலை நடந்த பேருந்து  விபத்தில் ஈழத் தமிழ் பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.

இன்று நடந்த இந்த சம்பத்தில் 30 வயது மதிக்கத்தக்க சுகந்தி என்ற ஈழத்துப் பெண் அதே இடத்தில் பலியானார் . அவர் மூன்று பிள்ளைகளின் தாயார் , வேலைக்கு சென்று கொண்டிந்த போது பலியாகியுள்ளார்.

ஜேர்மன் நாட்டில் இருந்து லண்டன் வந்து தனது கணவர் பிள்ளைகளோடு அவர் வாழ்ந்து வந்துள்ளார். மிச்சத்தில் உள்ள டட்லியா என்னும் சூப்பர் மார்கெட்டில் இவர் வேலை செய்து வந்துள்ளார்.

இன்று காலை லண்டன் முழுவதும் , பெரும் பனிப் புகார் காணப்பட்டது.  இப் பெண் நடைபாதையில் வீதியைக் கடக்க முற்பட்டவேளை அங்கே வேகமாக வந்த பேருந்து அவர் மீது மோதியுள்ளது. இதற்கு பனிப் புகாரும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here