விசேட நீதிமன்றம் அமைத்து வடக்கு கிழக்கில் பெண்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகம் முன்பாக பெண்கள் அமைப்புக்கள் நேற்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டம் வடக்கு மாகாண ஆளுநர், சிறுவர் மகளிர் இராஜாங்க அமைச்சர் ஆகியோரது அலுவலகங்கள் முன்பாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பெருமள விலான பெண்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தனர். சர்வதேச மகளிர் தினம் நேற்று முன்தினம் அனுஷ்டிக்கப்பட்ட நிலையிலேயே தாம் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்ததாக ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் முதலமைச்சர் அலுவலகம் முன் பாக நேற்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகிய இப்போராட்டம் சுமார் ஒரு மணித்தியாலம் வரை முன்னெடுக்கப்பட்டு, பின்னர் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜய கலா மகேஸ்வரன் ஆகியோ ரது அலுவலகம் முன்பாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப் பட்டிருந்தன.
பச்சிளம் குழந்தை வெளியே செல்ல விதியின்றி வீட்டில் என்றால்! நல்லாட்சி இங்கு ஏது?, நாங்கள் நடமாட நட மாடும் பொலிஸ் நிலையம் எங்களுக்கு வேண்டும், உல கமே ஏன் உறங்குகின்றாய்? பிள்ளைகளை காக்க துணிவு கொள், பிள்ளைகளை சீரழி க்கும் மிருகங்களுக்கு ஏன் தண்டனை தாமதம்? மரண தண்டனை வழங்கு, பாலி யல் வன்கொடுமைகளை விசாரிக்க விசேட நீதிமன்றம் வேண்டும்.
சமூகமே ஏன் உறங்கு கின்றாய்? எங்கள் பிள்ளை களை காக்க துணிவு கொள், பாலியல் வழக்குகளுக்கு மரபணு பரிசோதனை அறி க்கை ஒரு மாதத்திற்குள் சமர்ப்பித்தல் சட்டமாக்கப் படல் வேண்டும். மகளிர் தின மும் எமக்கோ துக்கதினம். ஏன் இந்த நிலை?, நாங்கள் பெண்கள் மட்டுமல்ல சகோ தரிகள், பிள்ளைகள், தாய்மார் கள், ஆண்களே இதை மறக் காதீர்கள், ஏடு தாண்டா பெண் சட்டங்க ளுக்கு கொஞ் சம் உயிர் தாருங்கள் என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பெண்களின் இந்த போராட் டத்தின் போது பொலிஸாரின் பிரசன்னமும் காணப்பட்டி ருந்தது. சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் குறித்த கவனஈர்ப்பில் கலந்து கொண்டு பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியு றுத்தியிருந்தனர். தாம் திரு கோணமலை மாவட்டத்தில் குறித்த கவனயீர்ப்பினை முன்னெடுத்து கிழக்கு மாகாண ஆளுநரிடம் மகஜர் ஒன் றினை கையளித்திருந்த தாக வும், அதன் பின்னரே தற் போது வடக்கு மாகாண முதல மைச்சரினை சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததா கவும் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடி வில் வடக்கு மாகாண முதல மைச்சர், ஆளுநர், இராஜா ங்க அமைச்சர் ஆகியோரி டம் மகஜர் ஒன்றும் ஆர்ப் பாட்டக்காரர்களால் கைய ளிக்கப்பட்டது. மேலும் வட க்கு கிழக்கில் தற்போது சிறு வர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதனையும் அவர்கள் ஊடகங்களிற்கு சுட்டிக்காட்டி, இத ற்கு பொலிஸ் மற்றும் சட்டத் துறையின் போதிய நடவடிக் கையின்மையே காரணம் என வும் சாடியிருந்தனர்.