நாளை 9 ஆம் திகதி ஐரோப்பா முழுவதும் இயற்கை பேரழிவை சந்திக்க நேரலாம் என ஜோதிடர் விடுத்த எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் 9 ஆம் திகதி நிகழும் சூரிய கிரகணத்தால் ஐரோப்பா முழுவதும் இயற்கை பேரழிவை சந்திக்க நேரலாம் என ஜோதிடர் பீட்டர் Stockinger கணித்துள்ளார்.
மேலும் இந்த சூரிய கிரணத்தால் சமூகத்தில் பெரும் அந்தஸ்துள்ள ஒருவர் இறக்க இருப்பதாகவும் 400 ஆண்டுகள் பழமையான Master Astrologer எனும் புத்தகம் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
1096 ஆம் ஆண்டு துவங்கி வேறுபட்ட வரிசையில் நிகழ்ந்து வரும் இந்த விசேட சூரிய கிரகணம் 2394 ஆம் ஆண்டு வரை தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Saros Series 130 என பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகணத்தால் குறிப்பாக, எகிப்து, இத்தாலி, ஸ்பெயின், துருக்கி ஆகிய நாடுகளும்,
ஆர்மீனியா, பிரான்ஸ், போர்ச்சுகல் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளும் பேராபத்தை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக பீட்டர் கணித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 13 ஆம் திகதி சூரிய கிரணம் நிகழ்ந்தது, அதன் அடுத்த மாதம் நவம்பர் 13 ஆம் திகதி பாரிஸ் தாக்குதல் நடந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.
பாரிஸ் தாக்குதல் குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் தமது வலைப்பக்கத்தில் இவர் கணித்து கூறியிருந்ததாகவும் கூறப்படுகிறது.