முல்லைத்தீவில் படையினருக்கு சிறப்புப் பயிற்சிகள் ஆரம்பம்!

0
136
armyமுல்லைத்தீவு படைகளின் தலைமை யகத்தின் கீழ் உள்ள  படையினருக்கு சிறப்பு காலாற்படை மற்றும் பற்றாலியன் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பு மற்றும் முத்தையன்கட் டுப் பகுதிகளில் உள்ள பற்றாலியன் பயிற்சிப் பாடசாலைகளில் இந்த சிறப்புப் போர்ப்பயிற்சி கள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
முல்லைத்தீவு படைகளின் தலைமைய கத்தின் கீழ் உள்ள டிவிசன்கள், பிரிகேட்கள், முன்னரங்க பாதுகாப்பு பிரதேசம் மற்றும் பற்றாலியன்களில் பணியாற்றும் படையி னருக்கே இந்த சிறப்பு போர்ப்பயிற்சி ஆரம்பி க்கப்பட்டுள்ளது.
68ஆவது டிவிசன் படையணியின் கீழ் உள்ள 7ஆவது கெமுனுவோச் படைப்பிரிவு க்கான பயிற்சி புதுக்குடியிருப்பு பற்றாலியன் பயிற்சிப்பாடசாலையில் இடம்பெறுகிறது. இங்கு 9 அதிகாரிகள் மற்றும் 352 படையி னருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
கடந்த மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்ப ட்ட இந்தப் பயிற்சிகள் அடுத்த மாதம் 4ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
அதுபோல, 64ஆவது டிவிசனின் கீழ் உள்ள 14ஆவது சிங்க ரெஜிமென்டுக்கு, முத் தையன்கட்டு பற்றாலியன் பயிற்சிப் பாடசா லையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு 11 அதிகாரிகள் மற்றும் 222 படையினருக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
போரற்ற சூழ்நிலையிலும் படையினரை தயார் நிலையில் வைத்திருக்க இராணுவம் அவர்களுக்கான முழு அளவிலான பயிற்சி களை மீள ஆரம்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here