ஓட்டோவும் உந்துருளியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டோ சாரதி உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
வியாழக்கிழமை முற்பகல் 10.45 மணியளவில் பருத்தித்துறை யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள கரணவாய் நாவலர்மடம் பகுதியில் இவ்விபத்து இடம் பெற் றுள்ளது.
இதில் ஆட்டோ சாரதியான தேவரன் புலோலி தெற்கைச் சேர்ந்த சின்னத்தம்பி எதிர் வீரசிங்கம் (வயது-52) ஆட்டோவில் பயணித்த இத்தாவில் பளையைச் சேர்ந்த செல்வராஜ் அன்புராஜ் (வயது-26) மற்றும் உந்துருளில் சென்றவரான கரணவாய் தெற்கைச் சேர்ந்த , பாலகுமாரசாமி சஞ்சீவகுமார் (வயது-24) என்ற மூவரும் படுகாயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நெல்லியடியில் இருந்து யாழ்ப்பாணம் வீதி வழியாக வியாபார நடவடிக்கைக்காக சென்று கொண்டிருந்த ஓட்டோவை திருப்ப முற்பட்டபோது பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
வீதியில் காயங்களுடன் கிடந்தவர்களை , அம்புலன்ஸ் மூலம் யாழ்ப்பாண வைத் தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலதிக விசாரணைகளை நெல்லியடிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.