தமிழ்க் கைதிகள்: தொடரும் உண்ணாவிரதம்; சிலர் மருத்துவமனையில்!

0
173

bbc_nocreditஇலங்கையில் சிறைச்சாலைகளில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்க் கைதிகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டுவருவதாக தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்காக குரல்கொடுத்துவரும் அமைப்பினர் கூறுகின்றனர்.

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகள் கடந்த மாதம் 22-ம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அவர்களில் சிலர் புதன்கிழமை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பைச் சேர்ந்த அருட்தந்தை சத்திவேல் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்தக் கைதிகளின் பிரச்சனையில் அரசாங்கம் பாராமுகமாக இருந்துவருவதாகவும் கூறிய அருட்தந்தை சத்திவேல், இவர்கள் தொடர்பிலான தங்களின் நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நீண்டகாலமாக சிறைவாழ்க்கையை அனுபவித்துவிட்ட தமிழ்க் கைதிகள் மீது வழக்குத் தொடரவுள்ளதாக கூறும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஏற்க மறுத்தே கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தங்களுக்கு விடுதலையே தேவை என்றும் வழக்குத் தொடர்வது தண்டனைக்கே வழிவகுக்கும் என்றும் கைதிகள் கருதுவதாக அருட்தந்தை சத்திவேல் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here