யாழ் காரைநகர் வடக்கு கடற்பகுதியில் 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய மீனவர்களின் 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அளவி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை கடற்றொழில் திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பதற்கு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.