இந்தோனேஷியாவில் 8.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் படாங்கில் இருந்து 808 கி.மீ தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
முதலில், 8.2 ரிக்டர் அளவில் பதிவாகி, பின்னர் 8.1 ஆக குறைந்தது,இந்த இரண்டு பதிவினை தொடர்ந்து 7.9 ரிக்டராக குறைந்துள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுமத்ரா தீவினை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சடைந்துள்ளனர்.
ஆனால், இதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
மேலும், நிலநடுக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு மையம் கவனித்து வருகிறது.