அரசியல் கைதிகளுக்காக யாழில் நேற்று ஆர்ப்பாட்டம்!

0
181
9228தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நேற்றைய தினம் யாழ்.பிரதான பேருந்து நிலையம் முன்பாக பொது அமை ப்புக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக விசாரணை களின்றி மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதி கள் 14 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி நேற்று ஒன்பதாவது நாளாகவும் உண்ணா விரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அவ்வாறான நிலையில் அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையிலேயே மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று முற்பகல் 11. 30 மணியளவில் யாழ்ப்பாண பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்ப ட்டது.
உயிரை அடகுவைத்து உண்ணா நோன்பிருக்கும் உறவுகளின் உயிருக்கு விலை பேசாதே, நாட்டில் நல்லாட்சியா? நாம் வீதியில் கண்ணீருடன் தவிக்கின்றோம் நீதி தேவதையே  கண்திறவாயோ?, அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அரசு கூறும் விலைதான் என்ன?, எம் உயிர்தான் என்றால் எடுத்துக் கொள் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது ஏழு வருடங்களாக தமிழ் அரசியல் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டு நேற்று முன்தினம் கொழும்பு விசேட நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் முருகையா கோமகனும் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு அரசியல் கைதிகளின் விடுதலைக் காக தனது ஆதரவை அளித்திருந்தார்.
இதேவேளை குறித்த போராட்டத்தில் சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், பாதிரிமார்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், பொதுமக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரையும் பங்கேற்று கைதிகளின் விடுதலைக்கு ஒன்றுபட்டு குரலெழுப்புமாறு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக் கான வெகுஜன அமைப்பு கோரியிருந்தது. இந்த போராட்டத்திற்கு அரசியல்வாதிகள் எவரும் சமுகமளிக்கவில்லை என்பதனால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் கவலை தெரிவித்தனர்.
மேலும் ஆறு வருடங்களின் பின்னர் விடுதலை பெற்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த முருகையா கோமகனை அவர்களது உறவினர்கள் ஆரத்தழுவி கட்டியணைத்து அழுதமை அங்கிருந்தோர் கண்களில் கண்ணீரை வர வைத்தது. கோமகனை வரவேற்க பெருமளவான மக்கள் அங்கு திரண்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here