பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழ் பெண்கள் அமைப்பு 7 ஆவது தடவையாக நடாத்திய தாயக விடுதலை பாடலுக்கான வன்னி மயில் நடனப்போட்டி நிகழ்வுகள் யாவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளன.
மூன்றாவது நாளாக கடந்த 28.02.2016 ஞாயிற்றுக்கிழமை ஒள்னே சுபுவா பகுதியில் இடம்பெற்ற பிரமாண்டமான அரங்கில் மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தன.
காலை 08.30 மணிக்கு போட்டிகள் ஆரம்பமாகின. ஈகைச்சுடரினை கடந்த 2007 ஆம் ஆண்டு திருகோணமலைப் பகுதியில் வீரச்சாவடைந்த 2ஆம் லெப். கட்டி அவர்களின் புத்திரி ஏற்றிவைத்தார்.
போட்டியின் நடுவர்களாக திருமதி அமலா அன்ரனி சுரேஸ்குமார் ( ‘நாட்டியக் கலைமணி” – யாழ் பல்கலைக் கழகம், ‘பரத சூடாமணி” நிருத்திய நாட்டியாலய அதிபர் – ஜேர்மனி),
திருமதி நிஷாந்தி சண்முகதாசன் (பரத கலாவித்தகர் – வட இலங்கை சங்கீத சபை, நுண்கலைமாணி (பரதம்) – இராமநாதன் நுண்கலைப் பீடம்)
சாவித்திரி இம்மானுவேல் (நாட்டியகலாரத்னா – பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி, MA/ Mphil தஞ்சாவூர் பல்கலைக்கழகம் தமிழ்நாடு) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
ஆரம்ப நிகழ்வாக நடுவர்கள் மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டு பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி சுகந்தி அவர்கள் போட்டியாளர்களின்; விபரக்கோவையை நடுவர்களிடம் கையளித்து போட்டியை ஆரம்பித்துவைத்தார்.
கடந்த 20.02.2016 சனிக்கிழமை மற்றும் 21.02.2016 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்கள் SARCELLES பகுதியில் மத்திய பிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவு குழு, பாலர் பிரிவு, மத்திய பிரிவு குழு, கீழ்ப்பிரிவு, கீழ்ப்பிரிவு குழு ஆகிய பிரிவுகளில் போட்டிகள் இடம்பெற்றிருந்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக அதி மேற்பிரிவு, அதிஅதிமேற்பிரிவு, சிறப்புப்பிரிவு மேற்பிரிவு குழு ஆகிய பிரிவுகளில் போட்டிகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. சத்தியதாசன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் தனது சிறப்புரையில், ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே இவ்வாறான நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. இதனை அனைவரும் கவனத்தில்கொள்ளவேண்டும். தேச விடுதலையை நோக்காகக் கொண்டே குறித்த நிகழ்வுகள் அனைத்தும் இடம்பெற்றுவருகின்றன. தொடர்ந்து எமது தேசவிடுதலைக்கான பாதையில் நாம் அனைவரும் பயணிக்கவேண்டும் என்றார்.
தொடர்ந்து, நிகழ்வின் நடுவர்கள், நடன ஆசிரியர்கள் வன்னிமயில் நினைவுக் கேடயம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர். நிகழ்வில் உள்ள குறைநிறைகள் நடுவர்களின் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டதுடன், கரகோசத்தின் மத்தியில் பாராட்டுதல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து பெண்கள் அமைப்பின் சார்பில் குறித்த நிகழ்வு திறம்பட நடைபெற ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து வன்னி மயில் 2016 நிகழ்வில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு இடம்பெற்றது.
பரிசளிப்பின் நிறைவாக அனைவரும் எதிர்பார்த்த 2016 இற்கான வன்னி மயிலாகத் தெரிவு செய்யப்பட்டவரின் பெயர் அறிவிக்கப்பட்டது. மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் கரகோசத்தின் மத்தியில் புஸ்பகுணபாலசிங்கம் அனித்தா 2016 ஆம் ஆண்டுக்கான வன்னிமயிலாகத் தெரிவுசெய்யப்பட்டார்.
அவருக்கான வன்னிமயில் கிரீடம், பட்டி, வெற்றிக் கிண்ணம் சென்ற ஆண்டுகளில் வன்னிமயில்களாக தெரிவுசெய்யப்பட்ட மாணவிகளால் வழங்கப்பட்டது. கேணல். பரிதி அவர்களின் நினைவாக தமிழீழத் தேசிய சின்னம் மற்றும் கேணல் பரிதி அவர்களினதும் உருவப்படம் பொறிக்கப்பட்ட நினைவுப் பதக்கத்தை கேணல் பரிதி அவர்களின் தாயார், வன்னிமயில் 2016 புஸ்பகுணபாலசிங்கம் அனித்தாவிற்கு அணிவித்து வைத்தார்.
கேணர் பரிதி அவர்களின் நண்பர்களான முந்நாள் போராளிகள் 2014 ஆம் ஆண்டு முதல் இந்த நினைவுப்பதக்கத்தை வன்னிமயிலாகத் தெரிவுசெய்யப்படுபவர்களுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
500 வரையான போட்டியாளர்கள் பங்குபற்றிய இந்நிகழ்வில், வன்னிமயில் விருதுக்கு இம்முறை 66 பிள்ளைகள் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தமிழ்பெண்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட நல்வாய்ப்புச் சீட்டிழுப்பு அதிர்ஸ்டம் பார்க்கப்பட்டது.
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு கண்டன.
நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற போட்டியாளர்களின் விபரம்:
வன்னி மயில் 2016 – புஸ்ப குணபாலசிங்கம் அனித்தா
அதிமேற்பிரிவு
அ) 1 ஆம் இடம் – கோகுலதாஸ் சூர்யா
2 ஆம் இடம் – ஜேசுதாசன் ஜெருஷா
3 ஆம் இடம் – செல்வரதன் ஜெனுஷா
ஆ) 1 ஆம் இடம் – விநாசித்தம்பி உமையாள்
2 ஆம் இடம் – கேதீஸ்வரன் கெனிதவி
3 ஆம் இடம் – திலீப்குமார் திசானிகா
அதிஅதி மேற்பிரிவு
1 ஆம் இடம் – செல்வரதன் நிந்துஷா
2 ஆம் இடம் – வெஞ்சஸ் அன்ரன் றெஜிஸ்ரினா
3 ஆம் இடம் – சுரேந்திரன் லவண்யா
சுப்பிரமணியம் சபித்தா
சிறப்புப் பிரிவு
1 ஆம் இடம் – ஸ்ரீஸ்கந்தராஜா சோபி
2 ஆம் இடம் – ஸ்ரீரஞ்சன் ஆரணி
3 ஆம் இடம் – சந்திரபாலன் சுவேதிகா
மேற்பிரிவு குழு
குழு 3 – 1 ஆம் இடம் – பாதச் சலங்கை (கவின்கலையகம்)
குழு 2 – 2 ஆம் இடம் – கடல்வீரம் வேங்கை காண (சேர்ஜி தமிழ்ச்சோலை)
குழு 6 – 2 ஆம் இடம் – பொங்கு தமிழா (சோதியா தமிழ்கலைக் கல்லூரி)
மத்திய பிரிவு குழு
குழுஇல.8 – 1ஆம் இடம் – எங்கள் தலைவன் பிரபாகரன்(செவ்ரோன் தமிழ்ச்சோலை)
குழு இல.1 – 2 ஆம் இடம் – மண்ணில் கொண்ட காதல்தான்(சேர்ஜி தமிழ்ச்சோலை)
குழு இல.2 – 3 ஆம் இடம் – பிரபாகரன் பெயரைச் சொல்லி (கவின்கலையகம்)
மத்திய பிரிவு
அ) 1 ஆம் இடம் – வினாசித்தம்பி இளையாள்
2 ஆம் இடம் – றஞ்சன் யான் பிருந்தா
3 ஆம் இடம் – மைக்கேல் சுவித்தா
ஆ) 1 ஆம் இடம் – ஜெகநாதன் சில்வியா
2 ஆம் இடம் – மகேஸ்வரன் புளோராஃ துஷந்தன் தீபிகா
3 ஆம் இடம் – சுரேஸ் சோந்ரின்
இ) 1 ஆம் இடம் – தயாபரன் சௌமியா
2 ஆம் இடம் – மகேந்திரராஜா பார்கவி
3 ஆம் இடம் – வடிவேலு ஆருதி
ஈ) 1 ஆம் இடம் – பத்மராஜா கோபிகா
2 ஆம் இடம் – குகராஜா சாரு
3 ஆம் இடம் – கஜேந்திரா அதிஷாஃ சிறீதரன் அபிஷா
மேற்பிரிவு
அ) 1 ஆம் இடம் – வஜீந்திரன் சௌமியா
2 ஆம் இடம் – புஸ்பகரன் அட்ஷயா
3 ஆம் இடம் – சுரேஸ் ஸ்டனிசியா
ஆ) 1 ஆம் இடம் – ராஜ்குமார் ரம்யா
2 ஆம் இடம் – சிறிநாதன் ஆர்த்தி
3 ஆம் இடம் – ஜேரோம் பெலாஷி
இ) 1 ஆம் இடம் – ராஜசுப்பிரமணியம் அபிஷா
2 ஆம் இடம் – ஜெயந்தன் ஆஷிகா
3 ஆம் இடம் – கோவிந்தராஜ் சௌந்தர்யா
ஈ) 1 ஆம் இடம் – வசந்தகுமார் லேனா
2 ஆம் இடம் – சந்திரசேகரன் அபிலானா
3 ஆம் இடம் – பத்மராஜா லோஜிகா
குழு அதிமேற்பிரிவு
1 ஆம் இடம் – இல.5 – ‘கடலே கடலே….” (செவ்ரோன் தமிழ்சோலை)
2 ஆம் இடம் – இல.1 – ‘வீழமாட்டோம்….” (ஓர்னேசுபுவா தமிழ்ச்சோலை)
3 ஆம் இடம் – இல.3 – ‘பாதச் சலங்கை….” (திரான்சி; தமிழ்சோலை)
பாலர்பிரிவு
1 ஆம் இடம் – மணிவேந்தன் தூயா
2 ஆம் இடம் – லோஜன் சாதனா
3 ஆம் இடம் – பார்த்தீபன் ஷரினி ஃ விவேகானந்த சிவம் அபிஷா
கீழ்ப்பிரிவு
அ) 1 ஆம் இடம் – பொன்னுச்சாமி விக்ரம் யூலியன்
2 ஆம் இடம் – யாதவராசன் டொறின்
3 ஆம் இடம் – கிருஷ்ணகுமார் பிலோனா
ஆ) 1 ஆம் இடம் – ஆதவன் இலக்கியா
2 ஆம் இடம் – யூனேஸ் ஷேர்லின்
3 ஆம் இடம் – ஸ்ரீரங்கன் ஹரினி
குழு கீழ்ப்பிரிவு
1 ஆம் இடம் – இல.2 – ‘சின்ன சின்ன பூக்கள்….”
2 ஆம் இடம் – இல.1 – ‘செண்பகமே செண்பகமே….”
ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.